மலேசியாவில் பெரியாரியல் நிகழ்ச்சிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 25, 2020

மலேசியாவில் பெரியாரியல் நிகழ்ச்சிகள்


கோலாலம்பூர், ஜூலை 22  கிள்ளான் நகரில் அமைந்துள்ள புக்கிட் ராஜா ( லெட்சுமி தோட்டம்) தமிழ்ப்பள்ளியில் வாழ்வியல் சிந்தனைகள் (தொகுதி 14 ) வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழ்கள் வழங்கப்பட்டன. இருபதுக்கும் மேற்பட்ட மேனாள் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில் அய்ம்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் திருமதி மல்லிகா பழனியாண்டி சிறப்புரை நிகழ்த்தினார்.  மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரும், தோட்ட நிர்வாகிகள் (சபா) மன்ற தலைவருமான மு. கோவிந்தசாமி சிறப்புரையாற்றி நூல்களை / உணவுக் கூடைகளை வழங்கினார். முதுபெரும் பெரியார் தொண்டர்கள்


கோ. ஆவுடையார், புலவர் கு.க. இராமன் ஆகியோர் நன்கொடை வழங்கியும் கூட்டத்தில் கலந்து கொண்டும் சிறப்பித்தார்கள்.


No comments:

Post a Comment