இடைத்தேர்தல் ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 24, 2020

இடைத்தேர்தல் ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம்

புதுடில்லி, ஜூலை 24- தமிழ கத்தில் குடியாத்தம், திரு வொற்றியூர், அசாமில் சிப்சா ஹர், மத்தியப் பிரதேசத்தில் அகர் தொகுதி, உத்தரப் பிர தேசத்தில் புலந்தசாஹர், துண்ட்லா தொகுதிகள், கேர ளாவில் சாவரா ஆகிய 7 சட் டப்பேரவைத் தொகுதிகள், பீகார் மாநிலத்தில் உள்ள வால்மீகி நகர் மக்களவைத் தொகுதி ஆகியவற்றின் எம்.பி. எம்எல்ஏக்கள் மறைந்ததைய டுத்து, அவை காலியானதாக அறிவிக்கப்பட்டன. இந்த 8 தொகுதிகளுக்கும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 3 மாத காலக்கெடுவுக் குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், நாட்டில் தற்போது கரோனா வைரஸ் பரவல் மற்றும் வடமாநிலங் களில் பெய்துவரும் பருவ மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் ஆகியவற்றால் இடைத்தேர்தல் நடத்தமுடி யாத நிலை ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து மத்திய சட் டத் துறை அமைச்சகத்திடம் தேர்தல் நடத்த இயலாத சூழல் இருப்பதைக் கூறி தேர் தல் ஆணையம் விளக்கம் அளித்து தேர்தலைத் ஒத்தி வைக்கும் முடிவையும் தெரிவித்தது.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இன்படி குறிப் பிட்ட அசாதாரண சூழலில் 6 மாத காலத்துக்குள் தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற் பட்டால், தேர்தல் ஆணையம் மத்திய அரசுடன் ஆலோ சித்து முடிவு எடுக்க முடியும். அதன்படி இந்த 8 தொகு திகளுக்கும் தேர்தலை ஒத்தி வைத்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment