ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 24, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • ராஜஸ்தான் மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு வழக்கில், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சபாநாயகர் தொடுத்த வழக்கை நிரகாரித்து, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம்.

  • உச்ச நீதிமன்றம் குறித்து தனது டுவிட்டரில் கருத்துப் பதிவு செய்ததற்காக, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கை தானாகவே முன்வந்து வந்து உச்ச நீதி மன்றம் விசாரிப்பது முறையற்றது என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:



  • பிரதமர் மோடி தனது செல்வாக்கை நிலை நிறுத்தவே கவனம் செலுத்துகிறார். அதற்கு அவரது கட்சியால் கைப்பற்றப் பட்ட நிறுவனங்கள் துணை போகின்றன என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.


தி இந்து:



  • ஜனநாயக மாண்புகளைத் தகர்க்கும் விதமாக தேர்ந் தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கவிழ்க்கும் பா.ஜ.க. பற்றி பேசாமல், காங்கிரஸ் கட்சியின் உட் பூசல்களை மட்டுமே ஊடகங்கள் பெரிதாகப் பேசுகின்றன என்பது அனைவருக்கும் கவலை அளிக்கும் விஷயம் என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஜோயா ஹாசன் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.


நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை:



  • என்.அய்.டி., அய்.அய்.டி. போன்ற தேசிய தொழில் நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும் என்ற நிபந்த னையை மத்திய அரசு இந்தாண்டு நீக்கியுள்ளது. ஜே.இ.இ 2020 முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதுமானது என மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

  • வில்லியனூர் அருகே எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டைப் போட்டது அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற் படுத்தியுள்ளது.


டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லி:



  • பிற்படுத்தப்பட்டோரில் கிரிமிலேயர் தொடர்பான வருமான வரம்பில், மொத்த சம்பள வருமானத்திற்குப் பதிலாக, வரி செலுத்தும் வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.


- குடந்தை கருணா


24.7.2020


No comments:

Post a Comment