பெரியார் கேட்கும் கேள்வி! (54) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 24, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (54)

புரியாத சடங்குகளைச் செய்யச் சொல்லி...



புரோகிதன் என்பவனுக்கு உள்ள லட்சணம் எல்லாம் முதலில் அவன் பெரிய ஜாதிக்காரனாக இருக்க வேண்டும். அவனுடைய நடத்தை, தன்மை முதலியவைகளைப் பற்றி நமக்கு கவலையில்லை. பெரிதும் நமக்கு தெரியாத பாசையில், அவசியம் புரியாத சடங்குகளைச் செய்யச் சொல்லி பணம் வசூலித்துக்கொண்டு போகிறவனையேதான் இன்று புரோகி தன் என்கின்றோம். மற்றும் அவன் காலில் நாமும், மணமக்க ளும் விழுந்து கும்பிடுகிறோம். அவனைச் சாமி என்று அழைக் கிறோம். இவற்றைத் தவிர புரோகிதனுக்கு வேறு லட்சணம் சொல்லுங்கள் பார்க்கலாம். அல்லது வேறு பயனையாவது சொல்லுங்கள் பார்க்கலாம். 


- தந்தை பெரியார், 'குடிஅரசு', 13.12.1943


- ‘மணியோசை’


No comments:

Post a Comment