‘‘ஒப்பற்ற தலைமை-3'' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வில் தமிழர் தலைவரின் சிறப்புரை
சென்னை, ஜூலை 24 பெரியாரைப் பாராட்டுகின்ற உலகம், பெரியாரால் பயன்பட்டுக் கொண்டிருக்கின்ற நாம், அன்னை மணியம்மையார் அவர்களை எத்தனை முறை பாராட்டவேண்டும். பாராட்டை அவர்கள் பெற்றதில்லை, தூற்றலைத்தான் அவர்கள் பெருமழையாகப் பெற்றார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
‘ஒப்பற்ற தலைமை'
கடந்த 4.7.2020 மாலை 5.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' (பொழிவு-3) எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
‘இந்து' பத்திரிகையில் ஆச்சாரியார்
எழுதிய அறிக்கை!
வைக்கம் சிறையில் தந்தை பெரியார் இருந்த பொழுது, அன்றைக்கு ஆச்சாரியார் என்ன எழுது கிறார்.
பெரியார் சிறையில் கொடுமையாக நடத்தப்படு வதைக் கண்டித்து இராஜாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பெரியாரின் சமூக மதிப்பைத் திருவாங் கூர் அரசாங்கம் அறியச் செய்தார். அதன் விளைவைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
தற்போது திருவனந்தபுரம் மத்தியச்சிறையில் சத்தியாகிரக கைதியாக இருக்கும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் உணவு மற்றும் தங்குமிடம் போன்ற விஷயங்களில் சாதாரண தண்டனைக் கைதியாக நடத்தப்படுவதாக நம்பகமான தகவல்கள் எனக்கு வருகின்றன. சிறை உடையை அவர் அணிகிறார். இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார்; தனிமைச் சிறையில் மற்ற சத்தியாகிரக சிறைவாசிகளிலிருந்து ரொம்ப தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது.
இவ்வளவுக்குப் பிறகும் நாயக்கர் மிகுந்த உற்சாகத் துடன் இருக்கிறார் என்பதைச் சொல்லவேண்டிய தில்லை. அவருடன் நன்றாகப் பழகியிருக்கிறேன். அவருடன் பல காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன். எனக்கு அவரைத் தெரியும். அவர் ஓர் தளர்வுறாத ஆன்மா. செல்வ வளத்தின் மகிழ்ச்சிகளையும், பதவி களையும் வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு, கடினமான இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்து வந்துள்ளார். பெரும்பாலான நம்மைப் போல அல்ல. உண்மையிலேயே, தம்மைத் தூய்மைப்படுத்தும் இந்தச் செயல்களை அவர் வரவேற்கிறவர். எனவே, பெரிதும் நாம் வருந்தவேண்டியதில்லை.
உயர்ந்த பதவியும், அந்தஸ்தும் கொண்டவர்களை இப்படிக் கடுமையாகத் திருவாங்கூர் அரசாங்கம் நடத்த விரும்பாமல் இருக்கலாம். ஆனால், பதவியும், அந்தஸ்தும் என்பது ஆங்கிலேயர் என்பதாயும், பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் பட்டங்களாலுமே அது கணக்கீடு செய்யப்படுகிறது.
கடைசியாகத் திருவனந்தபுரத்தில் இருக்கும்போது சிறைக் கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்து பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. புகார் சொல்ல எதுவும் இல்லை. உண்மையில், நாகரிகமாக அவர்கள் நடத்தப்படுவதாக நான் பெருமை அடைந்தேன். ஒரு நல்ல உயர்ந்த நோக்கத்திற்காக இந்திய சமஸ்தானத்தில் சிறை செல்ல நேர்ந்தவர்கள் நடத்தப்பட்ட முறை நன்றாக இருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் நேரும் அனுபவங் களுக்கு முற்றிலும் மாறானது அது. ஆனால், நாயக்கர் விஷயத்தில் சில காரணங்களுக்காக திருவாங்கூர் தவறு செய்துவிட்டதாகவே தோன்றுகிறது. நாயக்கரின் தகுதியை பற்றிய அறியாமை அதன் ஒரு பகுதி காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்காக அதை மன்னிக்க முடியாது.
நாயக்கர் அவர்கள் மாவட்டத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். மிகுந்த அமைதியுடன் அவர் அதை மதிக்கவில்லை. இந்தத் தண்டனை முற்றிலும் சட்ட விரோதமானது. வன் முறையைத் தூண்டவோ அதைப் போல் எதையும் செய்யாமலோ இருக்கும்போது, கீழ்ப்படியாமை மட்டுமே குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்படும் காரணமாக இருக்க முடியாது. எந்த சட்ட நடை முறையாக இருந்தாலும் வெளியேற்ற ஆணையின் நோக்கம், குற்றவாளி தன் பாதுகாப்பில் இருக்கும் போது மட்டுமே செயற்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன், நான் தவறாகவும் நினைக்கலாம்.
அவரை கடுங்காவல் சிறைத் தண்டனையில் வைத்திருப்பதும் இரும்பு விலங்கிட்டிருப்பதும் அவருக் குச் சிறை உடை அணிவித்திருப்பதும், மற்ற சத்தியா கிரக கைதிகள் சரியாகப் பெற்றுள்ளவைகளை அவ ருக்கு மறுப்பதும் முழுமையாக நியாயப்படுத்த முடி யாதவை. சிறையில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் தைரியமிக்க தலைவருக்கு என் பாராட்டுக் கள்.
போராட்டத்தைத் திரும்பப் பெற மகாத்மா காந்தி அறிவுறுத்த மறுத்துவிட்டார். அகிம்சையுடனும், மரி யாதையுடனும் அது நடத்தப்படவேண்டும். வெள்ளத் தின் மத்தியில் திருவாங்கூரிலோ, கேரளத்தின் மற்ற பகுதிகளிலோ ஏன் தமிழ்நாட்டிலோ பணம் கேட்பது சிரமமாக இருக்கிறது. ஆனால், வைக்கம் ஆசிரமத் திற்குப் பணத்தேவை அதிகமுள்ளது. சில அனுதாபி கள் ரூ. 1000 அளவு அனுப்பி வைத்துள்ளனர்.
‘‘மிகச்சிறந்த அரசியல் ஸ்தாபனத்தை நாம் பெற்றி ருந்த போதிலும் உணவு மற்றும் உடைப் பிரச்சினை களைத் தீர்த்த போதிலும் நாம் அமைதியாக சுதந்திர ஸ்வராஜ்யத்தை அடைய முடிந்தாலும் தீண்டாமையிலிருந்து விலகாமல் பயனில்லை. தீண்டாமையைச் சமபந்தி, கலப்புமணம், சாதி ஒழிப்பு ஆகியவற்றுடன் யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம். சாதி மற்றும் இனம் பற்றி வைக்கம் எந்தக் கட்டாயத்தையும் சுமத் தக் கோரவில்லை. ஆனால், சாதியிலோ, இனத்திலோ வேறுபாடு காட்டி, யார் ஒருவரையும் தீண்டாதவர் என வேறுபடுத்துவதையோ, வாழ்வின் அடிப்படை உரிமைகளைப் பெறவிடாமல் தடுப்பதையோ மறுக் கிறது'' என்று எழுதிய இராஜாஜி நன்கொடைகளை அனுப்ப வேண்டிக் கொண்டார் (‘தி இந்து', 27 ஆகஸ்ட் 1924)
இதுதான் பார்ப்பனீயம்
வைக்கம் போராட்டத்தில் திருவிதாங்கூர் அரசு பெரியாரைக் கைது செய்ததைக் கண்டித்து ஆச்சாரி யார் அவர்கள் கடிதம் எழுதுகிறார். அவரே ஆட்சிக்கு வந்த பிறகு, அதுவும் பெரியாருக்கு வயது முதிர்ந்த நிலையில், பெரியாரின் உடலில் பல சங்கடங்கள் இருக்கிறது என்று மருத்துவர்கள் சொன்ன நிலையில், எப்படி நடந்துகொண்டார்? இதுதான் பார்ப்பனீயம்.
காகத்தைப் படைத்து
கல்நெஞ்சப் பார்ப்பானையும்
ஏன் படைத்தாய்?
கச்சிய கம்பனே
என்ற ஒரு பாட்டு உண்டு.
தந்தை பெரியார் பேசுகிறார்!
1943 ஆம் ஆண்டில் ஓரிடத்தில் அய்யா அவர்கள் உரையாற்றும்பொழுது,
‘‘நான் பொதுவாழ்வில் இருந்து விலகி ஓய்வெடுத் துக் கொண்டு, நிம்மதியாய் பத்தியமாய் இருந்தா லொழிய, இனி 4, 5 வருஷத்திற்குமேல் உயிருடன் இருக்கமாட்டேன் என்பது எனக்கு நன்றாய்த் தெரி யும். அப்படி இருந்தாலும், ஒரு வேலையும் செய்யா மல், செய்ய லாயக்கில்லாமல் உயிரோடு இருப்பதும் சரி, வேலை செய்துகொண்டே இருப்பதன்மூலம் சாவதும் சரி என்று கருதியே வேலை செய்கிறேன், அலைகிறேன். நோய்வாய்ப்பட்டு தொல்லைப்பட்டுக் கொண்டும் சுற்றுகிறேன். இப்பொழுது வயிற்றுனுள் ஏதோ ஒரு அவயவம் வீங்குவதைத் தெரிந்து கொண்டே பேசுகிறேன். இதன் காரணம் என்ன? இந்த இயக்கம் என் சொந்தச் சொத்து. இதற்கு என் னைத் தவிர வேறு யாரும், எனக்கு மேல் பொறுப்புக் கொண்டவர்கள் இல்லை. ஆதலால், நான் சும்மாவா கவோ, அலட்சியமாகவோ அல்லது லாப நஷ்டம் பார்த்துக் கொண்டோ இருப்பது, துரோகமும், இழிதன் மையுமான காரியம் என்ற நிலையில்தான், நாம் இந்துக்களல்ல என்பதையும், நமக்கு திராவிட நாடு அமையவேண்டும் என்பதையும் உங்களுக்கு ஏகமனதாக ஒப்புக்கொள்ளும்படி செய்தேன். அதற்கு வேலை செய்யவோ, வழிகோலவோ வேண்டிய கடமையும், பொறுப்பும் என்னைவிட வேறு யாருக்கு அதிகம் இருக்கும் என்று கருதி, பொறுப்பை அவர்கள் தலையில் போட முடியும்.
ஆகவே, லட்சியத்தை ஈடேற்ற, என் உழைப்பும், பொறுப்பும் எனக்கு அதிக உரிமையைக் கொடுப்பது இயற்கைதானே! அந்த முறையிலேயே சொல்லுகி றேன், நாம் நம்முடைய லட்சியத்தை அடைந்தே தீரவேண்டும். நமது லட்சியம் ஒன்றே, நமக்கு, திராவிடர்களாகிய நமக்கு பிறவி காரணமாய் உள்ள இழிநிலை மாறவேண்டும் என்பதுதான், அந்த இழி நிலையிலிருந்து சமுதாயத்தில் இழிவாகக் கருதப்பட்டு, மற்ற துறைகளில் கேட்டை அடைந்திருக்கிறோம். அதனை மாற்றவேண்டும் என்பதுதான்'' என்று சொல்லுகிறார்.
பாராட்டை பெற்றதில்லை, தூற்றலைத்தான் அவர்கள் பெருமழையாகப் பெற்றார்!
அப்படிப்பட்ட பெரியாரை, அன்னை மணியம் மையார் அவர்கள் வாழ வைத்தார்கள் என்று சொன்னால், பெரியாரைப் பாராட்டுகின்ற உலகம், பெரியாரால் பயன்பட்டுக் கொண்டிருக்கின்ற நாம், அன்னை மணியம்மையார் அவர்களை எத்தனை முறை பாராட்டவேண்டும். பாராட்டை அவர்கள் பெற்றதில்லை, தூற்றலைத்தான் அவர்கள் பெருமழை யாகப் பெற்றார்கள்.
இன்றைக்கு நூற்றாண்டு விழாவில் மணியம் மையார் அவர்களை எல்லோரும் நினைக்கிறோம்.
தந்தை பெரியார் அவர்களின் உடல்நிலையை சரிப்படுத்துவதற்கு அன்னை மணியம்மையார் அவர்கள் செவிலியராக, செயலாளராக இருந்தார்.
அன்னை மணியம்மையாரைப்பற்றி தந்தை பெரியார் அவர்கள் சொல்கிறார்,
தந்தை பெரியார் பேசிய கூட்டங்களில் புத்தகம் விற்ற அன்னை மணியம்மையார்
'என்னுடைய உடல்நலத்தை சரிப்படுத்தினார் என்பதைவிட மிக முக்கியம் என்னவென்றால், நான் புத்தகங்களை அச்சிட்டு அச்சிட்டு மூட்டை மூட்டை யாகக் கட்டி வைத்திருந்தேன். அன்றைய மதிப்பில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் தேங்கியிருந்தன. மணியம்மையார் அவர்கள் அந்த புத்தக மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு வந்து, நான் கூட் டங்களில் பேசிக் கொண்டிருக்கும்பொழுது, புத்தங் களை விற்றுக் கொண்டிருப்பார். அவ்வளவு புத்த கங்களையும் மக்களிடையே கொண்டு சென்றார்' என்றார் அய்யா.
பெரியாருக்கு அதுதான் பெரிய மகிழ்ச்சி. ஒரு புத்தகம் போய்ச் சேர்ந்தால், பல பேரை மாற்றும். அதோடு பணமும் கிடைத்தது.
தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் பேசிக்கொண்டிருந்தபொழுது ஒருமுறை நகைச்சுவையாக,
அய்யா அவர்கள், ‘‘அம்மா, நீ வந்ததனால்தான், இவ்வளவு புத்தகங்கள் விற்று இருக்கிறது'' என்றார்.
உடனே மணியம்மையார் அவர்கள், ‘‘எனக்கு கமிஷனாகக் கொடுத்திருந்தால், நிறைய பணம் கொடுத்திருக்கவேண்டுமே?'' என்றார்.
‘‘பரவாயில்லை'' என்றார் அய்யா.
‘‘அதைப்பற்றி மட்டும் ஒரு வார்த்தைக்கூட பேசமாட்டீர்களே, நீங்கள்'' என்று மணியம்மையார் அவர்கள் வேடிக்கையாக சொன்னார்.
அப்படிப்பட்ட அளவிற்கு, ஒரு பெரிய சிறந்த நோய் தீர்க்கும் மாமருந்தாக அவர்களுடைய பணி இருந்தது.
நோய்கள் ஒரு பக்கம் - ஓய்வில்லை - அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
கடைசியாக, அவருடைய 90 ஆவது வயதில் சிறுநீர் பிரிவதில் பிரச்சினை ஏற்பட்டு, டாக்டர் பட் போன்றவர்கள் வழி செய்தார்கள். அவருடைய உடலில் துளை போட்டு, அதில் ஒரு பைப் இணைத்து, அதனை ஒரு பாட்டிலில் விட்டு, அந்தப் பாட்டிலை ஒரு வாளியில் வைத்து, அதைத் தூக்கிக் கொண்டு வருவார் பொதுக்கூட்டங்களுக்கும், மற்ற இடங் களுக்கும்.
90 வயதிலிருந்து 95 ஆம் வயதுவரை அந்த சங்கடங்களோடுதான் இருந்தார். சிறுநீர் அடைப்பு என்பது அய்யாவிற்குத் தாங்க முடியாத நிலை.
சிறுநீர் போக வேண்டும் என்ற உணர்வு வரும்பொழுது, கொஞ்ச நேரம்கூட பெரியாரால் தாங்க முடியாது!
பெரியாருக்கு எப்பொழுதாவது கடுமையான கோபம் வந்து, யாரைப்பற்றியும் கவலைப்படாமல் வேகப்படுவார் என்றால், அருகில் இருந்து பார்த்த எங்களைப் போன்றவர்களுக்குத் தெரியும். கையில் ஒரு கேன் வைத்திருப்பார்கள், அய்யாவிற்குச் சிறுநீர் போக வேண்டும் என்ற உணர்வு வரும்பொழுது, கொஞ்ச நேரம்கூட அவரால் தாங்க முடியாது. பொதுக்கூட்டத்தில் அய்யா அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும்பொழுதே, சால்வையைப் போட்டு, அந்தக் கேனை கொடுப்பார்கள். கொஞ்ச நேரம் ஆனாலும்கூட, கோபப்படுவார். ஏனென்றால், அவ ரால் தாங்க முடியாது.
அப்படிப்பட்ட ஒரு கொடுமையைத் தாங்கிக் கொண்டு அய்ந்தாண்டுகள் தொண்டாற்றினார்.
அடுத்ததாக, வேலூர் மருத்துவர்களுடைய பணி - டாக்டர் பட், டாக்டர் ஜான்சன் ஆகியோருடைய பணி.
தொடர்ந்து டாக்டர் சுந்தரவதனம், டாக்டர் இராமச்சந்திரா, டாக்டர் ரத்தினவேல் சுப்பிரமணியம் போன்றவர்களுடைய பணி,
அதேநேரத்தில் தொண்டர்களுடைய பணி. கடைசிநேரப் போராட்டங்களில்கூட அய்யா அவர் கள் எப்படி இந்த உபாதைகளையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தார்கள் என்ற பகுதியை அடுத்த கட்டமாக்கி,
துரோகங்களை பெரியார் எப்படி சந்தித்தார்?
அதற்கடுத்து, துரோகங்களை அவர் எப்படி சந்தித்தார் என்பதைப்பற்றி பேசலாம்.
ஆகவே, இவ்வளவு நேரம் கேட்ட உங்களுக்கு நன்றியைத் தெரிவித்து, இந்தப் பொழிவை இத்தோடு நிறுத்துகிறேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.
No comments:
Post a Comment