செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 24, 2020

செய்தித் துளிகள்....

* தமிழ்நாட்டில் காலியாக உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தற்போது இல்லை - தேர்தல் ஆணையம் அறிவிப்பு.


* தமிழ்நாட்டில் கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகள் ரத்து!


* பாபர் மசூதி இடிப்பில் குற்றவாளியாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட முரளிமனோகர் ஜோஷி வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு!


* கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு!


* கரோனா: தடுப்பூசி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் மனிதர்களிடம் பரிசோதனை தொடங்கியது.


* ஆப்கானிஸ்தானத்தில் இராணுவத் தாக்குதலில் 45 தலிபான்கள் கொன்று குவிப்பு.


* காருக்குள் குழந்தைகள் விளையாடுகிறார்களா - எச்சரிக்கை - உயிர் இழக்க வாய்ப்பு - திருக்கோயிலூர் அருகே குலதீபமங்கலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட காருக்குள் சென்று விளையாடிய குழந்தைகள் - காரின் கதவு மூடியதால் மூச்சுத் திணறி உயிரிழந்த பரிதாபம்!


* கரோனாவுக்கு பேவி பிராவீர் எனும் மாத்திரை நல்ல பலன் தருவதாக மூன்றாம் கட்ட பரிசோதனையில் கண்டுபிடிப்பு.


 * இராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தரப் பதவிகள் - மத்திய அரசு ஆணை.


* உலகில் முதன்முறையாக உலகத் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்காமல் நடைபெறும் அய்.நா. பொதுச்சபைக் கூட்டம்!


* +2 எழுதிய மாணவர்கள் மறு கூட்டலுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்.


No comments:

Post a Comment