பிரார்த்தனைக்குப் பரிசா?
கேள்வி: இந்தக் கொரோனாவிலும் திருப்பதி தேவஸ்தானம், ‘பக்தர்கள் தரிசனம் இரட்டிப்பு' என்று அறிவித்திருப்பதுபற்றி?
பதில்: கொரோனா வந்து பிழைக்க வேண்டி பிரார்த்தனை செய்த பக்தர்கள், கொரோனா வரக் கூடாது என்று பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் - இரண்டையும் சேர்த்தால் இரட்டிப்பாகத்தானே செய்யும்.
- ‘துக்ளக்', 29.7.2020
திருப்பதி கோவிலில் அர்ச்சகர்கள், ஊழியர்கள், ஜீயர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லையா? திருப்பதி ஏழுமலையான் கோவில் மூத்த அர்ச்சகர்கள் 4 பேர் கரோனாவால் மரணம் அடைய வில்லையா?
அலகாபாத், காசி, அரித்துவார் உள்பட பல பகுதிகளில் சாவன் சோமாவதி (ஆடிமாதத்தில் திங்களன்று வரும் அமாவாசை) அன்று கூட்டம் கூட்டமாக நீராடியதால், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கரோனா என்னும் தீ கடுமையாகப் பீடித்ததே இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன...
பிரார்த்தனையின் விளைவையா?
மூடப் பக்தியின் கோரத் தாக்குதலையா?
No comments:
Post a Comment