ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 29, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் மோடி, அயோத்தி கோயில் பூமி பூஜை நிகழ்ச்சிக்குச் செல்வது அரசமைப்புச் சட்டத்தை மதிப்பதாக எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது என இந்திய மஜ்லீஸ் கட்சித்தலைவர் அசாதுதீன் உவெசி கூறியுள்ளார்.

  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்கவில்லை என பரூக் அப்துல்லா தெரிவித்த கருத்து சரியல்ல. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்துள்ளன என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:



  • தமிழ் நாட்டில் வசிக்கும் ஈழவா, தீயா வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, ஜாதிச் சான்றிதழ் அளிக்கப்படும் என்ற ஆணையை தமிழ் நாடு முதல்வர் வெளியிட்டார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லிப் பதிப்பு



  • குஜராத்தில் கரோனா பரவி வரும் நிலையில் ரத யாத்திரை நடத்துவதற்கு குஜராத் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மதத்தைவிட மனிதம் முக்கியம் என நீதிபதிகள் விக்ரம் நாத், ஜே.பி.பரித்வாலா ஆகியோர் தெரிவித்தனர்.

  • ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது சபா நாயகர் பதவி நீக்க உத்தரவு பிறப்பித்த விவகாரத்தில், ஆளுநர் நடவடிக்கை, அரசமைப்புச் சட்டப்படி இல்லாமல் மத்திய அரசின் கருத்தின் அடிப்படையில் உள்ளது என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டைம்ஸ் ஆப் இந்தியா:



  • பார்ப்பனரல்லாதவர்களை கோயில்களின் அர்ச்சர்களாக நியமிக்க பாஜக முன்வருமா? என தி.மு.க. நாடாளுமன்ற உறுப் பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.


- குடந்தை கருணா


29.7.2020


No comments:

Post a Comment