அத்வானியிடம் நீதிமன்றம் கிடுக்குப்பிடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 25, 2020

அத்வானியிடம் நீதிமன்றம் கிடுக்குப்பிடி

லக்னோ, ஜூலை 25 பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியிடம் நான்கரை மணி நேரம் விசாரணை நடந்தது. நூற்றுக்கும் அதிகமான கேள்விகள் நீதிபதிகளால் கேட்கப்பட்டது.


உ.பி., மாநிலம் அயோத்தியில், 1992 இல், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட, 32 பேருக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, லக்னோவில் உள்ள, சி.பி.அய்., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, ‘வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று (ஜூலை 24) ஆஜராகி, வாக்குமூலம் பதிவு செய்தார். அவரிடம் சிபிஅய் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் சுமார் நான்கரை மணி நேரம் விசாரணை நடத்தினர். காலை 11 மணி முதல் 3.30 மணி வரை, நூற்றுக்கும் அதிகமான கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர்.


No comments:

Post a Comment