விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, இன்று ஜூலை 27 ஆம் நாள் காலை 10 மணி அளவில், சென்னை, அண்ணா நகர் இல்லத்தின் முன்பு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், கருப்புக்கொடி அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்சிமன்றக் குழுச் செயலாளரும், திருவள்ளூர் மாவட்டச் செயலாளருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், தென் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சைதை ப.சுப்பிரமணி, வட சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.சி.இராஜேந்திரன், தென் சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கழகக்குமார், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tuesday, July 28, 2020
வைகோ தலைமையில் கருப்புக் கொடி அறப்போர் ஆர்ப்பாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment