சென்னை, ஜூலை 18- ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்கள், சென்னையை விட்டு சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கக் கோரி, வழக்குரைஞர் சேசுபாலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் ‘‘நவம்பர் மாதம் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, சொந்த ஊர் திரும்ப விரும்புபவர் களுக்கு இ-பாஸ் வழங்க வேண்டும்’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேம லதா அடங்கிய அமர்வு, ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தர விட்டது.
No comments:
Post a Comment