செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 28, 2020

செய்தித் துளிகள்....

* குமரி மாவட்டம் கிள்ளியூரில் ராஜேஷ்குமார் (காங்கிரஸ்), நாகர்கோவில் சுரேஷ்ராஜன் (தி.மு.க.) ஆகிய சட்டப் பேரவை உறுப்பினர்களுக்குக் கரோனா தொற்று.


* சுற்றுச்சூழல் விதி மீறல்கள் குறித்து பொது  மக்கள் புகார் தெரிவிக்கக் கூடாதாம் - மத்திய அரசு முடிவுக்குக் கடும் எதிர்ப்பு


* ராஜஸ்தான் அரசியல் விவகாரம்: சட்டமன்றத்தைக் கூட்ட ஆளுநர் ஒப்புதல்! (ஆளுநர் மாளிகை முற்றுகை உபயம்!).


* 3388 கரோனா நோயாளிகள் பெங்களூருவில் மாயம். (மாநில பி.ஜே.பி. ஆட்சிக்கு ஒரு ‘ஓ' போடலாமா?).


* எனது அரசியல் வாழ்க்கைக்குப் பாதிப்பு வந்தாலும், கிழக்கு லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பொய் சொல்லமாட்டேன் - ராகுல் காந்தி ஆணித்தரம்.


* ஒரு பவுன் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தைக் கடந்தது.


* பெரிய வணிக நிறுவனங்களை மூட சென்னை மாநகராட்சி ஆணையர் ஆணை.


* சென்னை பல்கலைக் கழக தொலைதூரக் கல்விக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.


No comments:

Post a Comment