முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.1,000 ஆக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 12, 2020

முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.1,000 ஆக உயர்வு

காந்திநகர், ஆக. 12- குஜராத் மாநிலத்தில் முதலில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் மக்கள் முகக் கவசம் அணியாமல் இருந்து வருகின்றனர். அதன் காரணமாக அம் மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகமாகி வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாநிலத்தில் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் அபராதமானது ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து இது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டது.


இந்நிலையில், குஜராத்தில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.500லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப் பட்டுள்ளது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த நடைமுறை நேற்று (ஆகஸ்ட் 11) முதல் அமலுக்கு வந்தது என்று தெரிவித்துள்ளது.


கரோனா பரவலைக் குறைக்கும் ஒரு முயற்சியாகவே இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment