உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வழங்கப்பட்ட 10%  இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 6, 2020

உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வழங்கப்பட்ட 10%  இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

உச்சநீதிமன்றம்  உத்தரவு



புதுடில்லி, ஆக.6 உயர்ஜாதியினரில் பொருளா தாரத்தில் பின்தங்கியோருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில், உயர்ஜாதியினரில் பொருளா தாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்தது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்ற இது தொடர்பான மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மத்திய பா.ஜ.க. அர சால் தாக்கல் செய்யப்பட்டு, அவசர அவசர மாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் குடி யரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாக நிறைவேறியது.


இந்த நிலையில், இந்த சட்டத்துக்கு எதி ராக ஜன்ஹித் அபியான் (பொதுநல பிரச் சாரம்), யூத் பார் ஈக்வாலிடி (சமத்துவத்துக்கான இளைஞர்கள்) உள்ளிட்ட அமைப்புகள் மற் றும் தொல்.திருமாவளவன், ஆர்.எஸ்.பாரதி, ஜி.கருணாநிதி உள்ளிட்டோர் தரப்பில் பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த வழக்கு மீதான விசாரணை, கடந்த ஆண்டு ஜனவரி 25- ஆம் தேதி உச்சநீதிமன் றத்தில் நடந்தபோது உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அர சின் முடிவுக்கு எதிராகத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும் இந்த மனுக்கள் மீது பதில் அளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். தொடர்ந்து இந்த வழக்கின் மீதான விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது.


இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங் களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 31- ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.


இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று (5.8.2020) தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது.


அப்போது இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


No comments:

Post a Comment