காரைக்குடி,ஆக.22, பகுதி நேர பி.இ, பி.டெக் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழு வதும் உள்ள 465-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் நேரடி சேர்க்கைக்கு என 10 சதவீத இடங்கள் என 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. நேரடி இரண் டாம் ஆண்டு சேர்க்கை காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவங்கள் கரோனா பாதிப்பு காரணமாக ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை பெறப் பட்டு வருகின்றன. மாணவர்கள் தங்களின் மொபைல் எண், இ-மெயில் உதவியுடன் பதிவு செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment