தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகத்திற்குள் பிள்ளையார் சிலையா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 22, 2020

தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகத்திற்குள் பிள்ளையார் சிலையா

தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகத்திற்குள் பிள்ளையார் சிலையா?


அஞ்சல் கண்காணிப்பாளரிடம் கழகத் தோழர்கள் புகார்



தருமபுரி,ஆக.22, தருமபுரி தலைமை அஞ்சல் நிலைய அலுவலகம், பேருந்து நிலையம் அருகே செயல் பட்டு வருகிறது .அஞ்சல் அலுவலகத் திற்குள் ஏற்கெனவே ஒரு சிறிய அளவிலான பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்தது. அவற்றை அகற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் கடந்த காலங்களில் புகார் அளித் திருந்தனர். சிலை அகற்றப்படாமல் மரத்தடியில் அங்கே வைக்கப்பட் டிருந்தது.


தற்போது சிலை  வைக்கப்பட்டு இருந்த இடத்தில் பெரிய அளவில் பீடம் கட்டி பெரிய அளவிலான பிள்ளையார் சிலையை வைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.  அதற்கான பணி நடைபெறுவதை அறிந்த கழகப் பொறுப்பாளர்கள் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி தலைமையில் இளம்பரிதி, வேணு கோபால், அறிவுடைநம்பி மற்றும் பலர் மாவட்டத் தலைமைஅஞ்சல் கண்காணிப்பாளரை சந்தித்து சிலையை அகற்றக்கோரி புகார் கடிதம் கொடுத்துள்ளனர்.


கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது:


மதச்சார்பற்ற நாட்டில் மதச் சார்பற்ற அரசு அலுவலகமான  தருமபுரி தலைமை அஞ்சல் நிலை யத்தில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிக்குள், வைத்திருக்கும் பிள்ளையார் சிலை இந்திய அரசு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரா னது. இந்நிலையில் அந்த சிலை வைத்துள்ள பகுதி விரிவுபடுத்தப்பட்டு தற்போது பெரிய  அளவில் பீடம் கட்டி பெரிய பிள்ளையார் சிலையை வைக்க பணி நடைபெற்று வருகிறது. அரசு அலுவலகங்களில் கடவுள் சிலைகள், கடவுளர்கள் படங்கள் வைக்க கூடாது என்று 7553/66-2 அரசின் உத்தரவு இருந்தும், மதுரை உயர் நீதிமன்ற ஆணை No 3298 Of 2010 dated17-3-2010  ஆகிய உத்தரவு களுக்கு எதிராக தங்கள் கட்டுப்பாட் டில் இருக்கும் தலைமை அஞ்சலக அலுவலகத்திற்குள் பிள்ளையார் சிலை வைக்கப்படுவது கண்டனத்துக் குரியது.


தங்கள் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். மேற்கண்ட சிலையை தாங்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அச் சிலையை அகற்றாவிட்டால் தங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதுடன், பொதுமக்களைத் திரட்டி அஞ்சல் அலுவலகம் முன் கண்டன மறியல் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட் டுள்ளது.  பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இளம்பரிதி, வேணுகோபால், அறிவுடைநம்பி, ராஜா  ஆகியோர் தருமபுரி தலைமை அஞ்சல் கண்காணிப்பாளரை சந் தித்து மனு அளித்தனர். அஞ்சல் கண் காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.


No comments:

Post a Comment