காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்ட விநாயகன் சிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 22, 2020

காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்ட விநாயகன் சிலை


மதுரை,ஆக.22, மதுரை காம ராசர் பல்கலைக்கழக வளாகத் தில்இரவோடு இரவாக பல்கலைக் கழக வளாகத்திற்குள் விநாயகன் சிலை நிறுவப்பட்டதைக் கண்ட மாணவர்கள் கொதிப்படைந்து கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட் டிருந்த விநாயகன் சிலை அகற்றப் பட்டது. ஒருகுறிப்பிட்ட மத வழிப்பாட்டை முன்னிறுத்துவது மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும் எனக் கூறி தமிழக அரசு உடனே தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர் அமைப்புகளின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


இதனையடுத்து பலரும் கண் டனம் தெரிவிக்க அடுத்த ஒருமணி நேரத்திலேயே காமராசர் பல் கலைக்கழகத்தில் வைக்கப்படிருந்த விநாயகன் சிலை அகற்றப்பட்டு, அந்த இடத்தில் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டன. இந்த நட வடிக்கையை மாணவர்கள் பெரி தும் வரவேற்றுள்ளனர்.


No comments:

Post a Comment