கனிமொழி எம்.பி.,வலியுறுத்தல்
சென்னை, ஆக. 17- திமுக எம்.பி.,கனிமொழி சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21க்கு உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கதக்கது. இந்த நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மேலும் தாமதமின்றி நிறைவேற்ற வேண் டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் பேஸ்புக், வாட்ஸ் அப்: ராகுல் காந்தி கண்டனம்
புதுடில்லி, ஆக. 17- பேஸ்புக், வாட்ஸ் அப் சமூக ஊடகங்களை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தான் கட்டுப்படுத்துகிறது என காங் கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
இந்தியாவில் வாட்ஸ்ஆப், பேஸ்புக்கை, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பேஸ்புக் பக்கத்தில் உள்ள பாஜக தலைவர்களின் மோசமான பதிவுகளை, வெறுப்பு பேச்சுகளை அந்நிறுவனம் கண்டுகொள்வதில்லை என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பான செய்தியை பகிர்ந்து ராகுல் காந்தி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மருத்துவர் கோர்கோ சாட்டர்ஜிக்கு கொலை மிரட்டல் விடும் பாஜகவினர்!
கொல்கத்தா, ஆக. 17- இந்திய அளவில் மொழியுரிமை முன்னெ டுப்புகளில் முக்கிய பங்காற்றிவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் கோர்கோ சாட்டர்ஜி, அசாம் பாஜகவினர் மற்றும் காவலர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்டிருக்கும் பல்வேறு தேசிய இனங்களின் மொழிகள், ஒன்றிய அரசின் ஒற்றை மொழி ஆதிக்கத்தால் நசுக்கப்படுவதற்கு எதிராகத் தொடர்ந்து இயங்கி வந்தவர் கோர்கோ சாட்டர்ஜி.
மாநில மொழிகளின் உரிமை சார்ந்த இயக்கத்திற்காக ஒருங்கி ணைக்கப்பட்ட அமைப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரான கோர்கோ சாட்டர்ஜி, அண்ணாவின் மாநில சுயாட்சி கோட்பாடுகளையும் பின்பற்றி வருகிறார். ஆளும் பாஜக அரசின் இந்துத்துவ எதேச்சதிகாரத்தையும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான அவர்களது வெறுப்பரசியலையும் தொடர்ச்சியாக ஊடகங் களின் விவாத நிகழ்ச்சிகளில் கோர்கோ சாட்டர்ஜி தோலுரித்திருக் கிறார். அண்மையில், அசாம் தொடர்பாக கோர்கோ சாட்டர்ஜி கூறிய கருத்து ஒன்றை முன்வைத்து அசாமிலும், வங்காளத்திலும் உள்ள பாஜகவினர் அவர்மீது கடுமையான தாக்குதலைத் தொடுத் திருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி மேற்குவங்க, அசாம் பாஜகவினர் மற்றும் காவல்துறையினரால் தனது உயிருக்கு அச்சுறுத் தல் இருப்பதாக கோர்கோ சாட்டர்ஜி தனது கடிதத்தில் குறிப் பிட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் கோர்கோ சாட்டர்ஜியின் கடிதம் பல்வேறு தரப்பினர்களால் நாடு முழுவதும் பகிரப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment