கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 12, 2020

கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு


இடுக்கி, ஆக. 12- கேரளாவில் கடந்த ஜூன் 1ஆம்தேதி பருவமழை தொடங்கி பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. 


இதனால், பல்வேறு நகரங்களி லும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடு கிறது.  கேரளாவின் இடுக்கி, மலப் புரம் மற்றும் வயநாடு பகுதிகளில் வரும் 11ஆம்தேதி வரை தீவிர கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்தது.  தொடர்ந்து ஆபத்து நிலையை குறிப்பிடும் சிவப்பு வண்ண எச் சரிக்கையும் விடுத்தது.


இந்த நிலையில், கேரளாவின் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக் கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.


கேரளாவின் இடுக்கி மாவட்டத் தில் உள்ள சுற்றுலாத் தளமான மூணாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தேயிலைத் தோட்டங்களில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டு மின்றி, தமிழகத்தின் தென்மாவட் டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள்.  இதில், ராஜமலைப் பகுதியில் கனமழையால் கடந்த வெள்ளி கிழமை நிலச்சரிவு ஏற்பட் டது.  இதில் 20க்கும் மேற்பட்ட வீடு கள் மண்ணில் புதைந்து விட்டன.


இந்தச் சம்பவத்தில் சிக்கி பலர் பலியானார்கள்.  தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து வந்தது.  இந்நிலையில், சம்பவப் பகுதியில் இருந்து நேற்று மூன்று பேர்களது உடல் மீட்கப்பட்டன. 


இதனால் பலி எண்ணிக்கை 52 ஆக உயர்ந்து உள்ளது என இடுக்கி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


No comments:

Post a Comment