திருவனந்தபுரம், ஆக. 9- கொல்லத் தைச் சேர்ந்த கடவூர் ஜெகன் என்ற ஆர்.எஸ்.எஸ். ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொல்லம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கொல்லத்தைச் சேர்ந்த கடவூர் ஜெகன் என்ற ஆர்.எஸ்.எஸ். ஊழி யர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே அமைப்பைச் சேர்ந்த 9 ஊழி யர்களுக்குக் கொல்லம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப் பளித்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊழிய ரான ஜெகன் கொல்லம் கடவூர் பகுதியில் குத்திக் கொலை செய்யப் பட்டார். அவருடைய மைத்துன ரான ரகுநாதப்பிள்ளையும் தாக்கப் பட்டார். உடம்பில் 50 காயங்களுக்கு மேல் உள்ளான ஜெகன் உயிரிழந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த வினோத், கோபக்குமார், சுப்பிர மணியன், பிரியராஜ், பிரணவ், அருண், ரஜனீஷ், தினராஜ் மற்றும் ஷிஜு உள்ளிட்டோர் கைது செய் யப்பட்டனர். அவர்களுக்குக் கொல் லம் கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். உடனே இவ்வழக்கு கொல்லம் குற்றவியல் அமர்வு நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. அப் படி மாற்றப்பட்ட வழக்கில்தான் தற்போது மீண்டும் ஆயுள் தண் டனை எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு காணொலி மூலம் வழங்கப்பட்டது. இந்த ஒன் பது பேரில் இருவருக்கு கரோனா தொற்று இருப்பதால் நடுவர் காணொலி மூலம் தீர்ப்பளித்தார்.
ஆயுள் தண்டனை மட்டுமல் லாமல் 9 பேருக்கும் ரூபாய் 71,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பல ஆண்டுகளாக ஆர். எஸ்.எஸ் வன்முறை வெறியாட்டங் களை நிகழ்த்தி வருகிறது.
கேரள மாநிலத்தில் வகுப்புவாத வெறிகொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் கம்யூ னிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட் சிக்காரர்களைக் கொலை செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு வந்தனர். தற்பொழுது அதே ஆர். எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவ ரையே கொலை செய்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ்.. அமைப்பின் வன் முறை வெறியாட்டத்துக்கு எல் லையே இல்லை என்பது இவ்வழக் கின்மூலம் அம்பலமாகியுள்ளது.
No comments:
Post a Comment