டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
- ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கும் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும், தன்னாட்சி முறையை மீட்டெடுக்கவும் அம்மாநில எதிர்க்கட்சிகள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளதானது, அங்கு ஓர் ஆண்டுகாலம் ஊரடங்கும், தலைவர்கள் சிறைவைப்பும் இருந்தாலும், அம் மாநில மக்களின் எண்ணங்களை முடக்க முடியவில்லை என்பதைக் காட்டுகிறது என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
- டில்லி தப்லீக் ஜமா அத் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மீது கரோனா தொற்று பரப்பினார்கள் என்ற பெயரில் வழக்குப் பதிவு செய்ததை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த ஓர் ஆண்டு காலமாக அந்த அமைப்பினர்மீது தவறான செய்திகளைப் பதிவிட்ட ஊடகங்களுக்கும், வழக்குப் பதிவு செய்த அரசுக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு சாட்டையடி என தலை யங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காஷ்மீரில் காங்கிரஸ், சி.பி.எம்., பரூக் அப்துல்லா தலைமை யிலான தேசிய மாநாட்டுக் கட்சி, மெகபூபா தலைமையிலான பி.டி.பி. கட்சி உள்ளிட்ட ஆறு கட்சிகள் இணைந்து 370ஆவது சட்டப் பிரிவை மீண்டும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தாகப் பிறப்பிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வரவேற்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
- சென்ற ஆண்டு மருத்துவப் படிப்பில் இரண்டாண்டு டிப்ளமோவை பட்டப்படிப்பாக மாற்றிய நிலையில், மீண்டும் இரண்டாண்டு டிப்ளமோவை மத்திய சுகாதார அமைச்சகம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்துகிறது. கரோனா தடுப்புப் பணிக்கு மருத்துவர்கள் அதிகம் தேவை என்பதால் இந்த முடிவு என அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் :
- வழக்குரைஞர் பிரசாந்த பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, தானே முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்து அவர் குற்றவாளி என அறிவித்துத் தண்டனை தர இருப்பது, நடை முறை மீறல் என மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே தனது கட்டுரையில் கூறியுள்ளார்.
தி டெலிகிராப்:
- அரசின் கொள்கைகளை விமர்சனம் செய்யும் எழுத் தாளர்கள், கவிஞர்கள் அனைவரும் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை வராவராவ், சாய்பாபா போன்றோர் காவலில் பல மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, கருத்துச் சுதந்திரம் பறிபோவதை எழுத்தாளர், பதிப்பாளர் சமிக் பந்தோ பாத்யாய் தனது பேட்டியில் விவரித்துள்ளார்.
- குடந்தை கருணா
24.8.2020
No comments:
Post a Comment