தமிழகத்தில்  கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 24, 2020

தமிழகத்தில்  கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, ஆக.24 தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப் புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மழை குறைந்திருந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண மாக மீண்டும் பரவலாக மழைபெய்ய தொடங்கி இருக்கிறது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (திங்கட்கிழமை) மழைக்கான வாய்ப்பு உள்ளது.


இங்கிலாந்து அரசுக்கு பாகிஸ்தான் கோரிக்கை


இஸ்லாமாபாத்,ஆக.24, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பாகிஸ் தானுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசுக்கு முறைப்படி கோரிக்கை வைக் கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் அக்பர் தெரிவித்துள்ளார்.நவாஸ் ஷெரீப்பை தலைமறைவானவர் என்று ஏற்கெனவே பாகிஸ்தான் அறிவித் துள்ளது.


No comments:

Post a Comment