கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு அறிவிப்பை வெளியிட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 24, 2020

கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு அறிவிப்பை வெளியிட்டது


சென்னை, ஆக.24 2010ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு கொண்டு வந்த கல்வி உரிமைச் சட்டத்தின்படி 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்வி கற்கும் உரிமை அடிப்படை உரிமை ஆக்கப்பட் டுள்ளது. இந்த கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில்  ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்படும் இடங் களில் 25 விழுக்காடு, பொருளா தாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கப்பட வேண்டும். இந்த 25 விழுக்காடு இடங்களில் அனு மதிக்கப்படும் நலிவடைந்த பிரிவு மாணவர்களிடம்  எந்தவிதக் கட்டணம் எதையும் தனியார் பள்ளிகள் வசூலிக்கக் கூடாது. இந்தக் கல்வி ஆண்டில்  நலிவடைந்த குடும்பத்தைச் சார்ந்த மாணவர் களுக்கான அனுமதி பற்றிய அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 25 விழுக்காடு இடங் களுக்கு ஆகஸ்ட் 27 முதல் செப் டம்பர் 25 வரையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இது குறித்த அறிவிப்பினையும் தனியார் பள்ளிகள் முறையாக தெரிவிக்க வேண்டும். விருப்பம் உள்ள பெற்றோர்கள் www.rte.tnschools.gov.in எனும் இணைய தளம் முலமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலு வலகம், வட்டாரக் கல்வி அலு வலகம், இ.சேவா மய்யம் ஆகிய வற்றை அணுகியும் விண்ணப்பிக் கலாம். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த வகுப்பினருக்கு அனுமதி அளிக்கப்பட்ட மாண வர்கள் பற்றிய  விவரங்களை சம்பந் தப்பட்ட  பள்ளிகள் இறுதியில்  அறி வித்து, வெளியிட வேண்டும் என தமிழக அரசுக் குறிப்பு கூறுகிறது.


கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயக்கும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள், நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கு தமிழக அரசின் உத்தரவு பொருந் தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment