ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 17, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல்,


அய்தராபாத் பதிப்பு:



  • அண்மைக் காலமாக மிக முக்கியமான மக்கள் பிரச்சினை வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் மவுனம் பலரையும் அதிர்ச் சிக்குள்ளாக்கியுள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் ஆதங்கத்தைப் பொதுவெளியில் சொல்வது தவறல்ல. அதைத் தடுக்க நினைப்பதால் எந்தப் பயனும் இல்லை என பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு குறித்த உச்ச நீதி மன்றத் தின் தீர்ப்பு குறித்து தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:



  • முகநூல் பா.ஜ.க.வின் அவதூறுச் செய்திகளைத் தடை செய்யாமல் இருப்பதற்கு, இந்தியாவில் உள்ள வணிகம் பாதிக் கப்படக்கூடாது என்பதால்தான் எனும் செய்தி குறித்து நாடாளு மன்றக் குழு விசாரிக்கும் என தகவல் ஒளிபரப்பு துறைக்கான குழுவின் தலைவர் சசி தரூர் செய்தி வெளியிட்டுள்ளார்.


தி இந்து, டில்லி:



  • இந்திய நாடு எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்கிறது. உச்ச நீதிமன்றம் தனது செயல்பாட்டில் தோல்வி அடைந்து விட்டது என டில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பிரதமர் மோடி துவக்கிய பி.எம். கேர்ஸ் எனும் டிரஸ்ட் குறித்த தகவலைத் தெரி விக்க பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது.

  • பிரதமர் மோடியின் சுதந்திர தினப் பேச்சில் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் கருத்து எதுவும் இல்லை என மூத்த பத் திரிக்கையாளார் ஹரீஸ் கரே தனது கட்டுரையில் தெரிவித்து உள்ளார்.


டெக்கான் ஹெரால்டு:



  • சட்டீஸ்கரி மொழியை எட்டாவது அட்டவணையில் சேர்த்திட வலியுறுத்தி, அம்மாநில முதல்வர் பூபேந்தர் பாகல் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.


   (ராஜஸ்தானி மொழியை எட்டாவது அட்டவணையில் சேர்த்திட அம்மாநில முதல்வர் அசோக் கேலாட் பிரதமருக்குச் சென்ற ஆண்டு கடிதம் எழுதியது  நினைவு கூரத்தக்கது.)



  • 2015இல் அப்போதைய சித்தராமய்யா தலைமையிலான அரசினால் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த விவரங்களை உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வெளியிட வேண்டும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.


தி டெலிகிராப்:



  • 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படிவத்தில் இதுவரை இருந்து வந்த ‘பிறர்’ என்ற வரிசை நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜார்கண்ட் பழங்குடியினர், கணக்கெடுப் பைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.


- குடந்தை கருணா


17.8.2020


No comments:

Post a Comment