குடும்பச் சொத்தில் சம உரிமை பெண்களுக்கு உண்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 11, 2020

குடும்பச் சொத்தில் சம உரிமை பெண்களுக்கு உண்டு!

91 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்னது;


இன்று உச்சநீதிமன்றம் சொல்கிறது


இந்து வாரிசுரிமைச் சட்டப்படி (2005ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தச்சட்டம்), குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று இன்று (ஆக-11) காலை ஜஸ்டிஸ் அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நஸீர், எம்.ஆர்.ஷா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது வரவேற்புக்கு உரியதாகும்.


தந்தை பெரியார் அவர்கள் 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம் 91 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment