எழுச்சித் தமிழருக்கு எமது உறவு - உணர்வு பொங்கும் வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 17, 2020

எழுச்சித் தமிழருக்கு எமது உறவு - உணர்வு பொங்கும் வாழ்த்து!


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சமூகநீதிக்கும், ஜாதி ஒழிப்பிற்கும் தனது வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிவருபவருமான அருமைச் சகோதரர், 'எழுச்சித் தமிழர்' என்ற சிறப்போடு அனைத்து முற்போக்காளர்களாலும் கொண்டாடப்படும் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களது 59ஆம் ஆண்டு பிறந்த நாளில்,  அவரை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்!


தொல்.திருமாவளவன் அவர்கள் ஒரு சிறந்த லட்சியப் போராளி. தந்தை பெரியார், அயோத்திதாசப் பண்டிதர், டாக்டர் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் ஏற்றிட்ட ஜாதி ஒழிப்பு - சமூகநீதி - சமதர்மக் கொடியையே ஏந்தி இன்றைய தலைமுறையின் எழுச்சி நாயகனாகத் திகழ்ந்து, களத்தில் நிற்கும் கடமை வீரர் ஆவார்!


சிறந்த நாடாளுமன்றவாதியாகப் பணியாற்றிடும் அதே நேரத்தில், சமத்துவம் வேண்டிடும் - அதற்காக சகலத்தையும் இழக்கவும் தயாரான, எத்தனை எதிர்ப்புகள், ஏளனங்கள், அடக்கு முறைகள்  - அஞ்சாது  அவற்றை எதிர் கொள்ளும் எதிர்நீச்சல் நாயகன்!


அவர் வேறு; நாம் வேறு என்று எவரும் பிரிக்க முடியாத லட்சிய உறவு எங்களிடையே! ஏன் நம்மிடையே!!


அவர் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து தொண்டறப் பணியைத் தொடர்க!


வாழ்க, வாழ்க திருமாவளவன்!


 


கி.வீரமணி,


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


17.8.2020


No comments:

Post a Comment