டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க மாணவர்கள் போராடி வரும் நிலையில் அவ்வாறு ஒத்தி வைக்க முடியாது என திட்டவட்டமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில், டிரம்ப் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதை அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் தெளிவாக அறிவித்து விட்டார் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
- ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக வந்துள்ள புகாரை விசாரிக்க நாடாளுமன்றக் குழு தலைவர் சசி தரூர் முடிவு எடுத்த நிலை யில் அவரை நீக்க வேண்டும் என பா.ஜ.க. கோருவது சரியல்ல. ஜனநாயகப் போக்கை பன்னாட்டு நிறுவனங்கள் முடிவு செய் வதை அனுமதிக்கக்கூடாது என தலையங்கத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:
- இன்னும் இரண்டு ஆண்டுகளில் கரோனா தொற்று முடி வுக்கு வரும் என உலக சுகாதாரத் தலைவர் தெரிவித்துள்ளார்.
- பீகாரில் வரும் நவம்பர் மாதம் தேர்தலுக்கான நடை முறைகளை தேர்தல் ஆணையம் விரிவாக வெளியிட்டுள்ளது. கரோனா தொற்று பரவி வரும் நிலையிலும், தேர்தலை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் :
- மண்டல் துவக்கிய அமைதிப் புரட்சி முப்பது ஆண்டு களைக் கடந்து விட்டது. ஓ.பி.சி. பிரிவினரில் உள்ள முரண் பாடுகள், இந்துத்துவ அரசியல் எழுச்சி இந்த அமைதி புரட்சியை நீர்த்துப்போகச் செய்து விட்டது. ஆனாலும், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு இன்னமும் முழுமை பெறாமல் இருப்பதால், இதைத் தொடரவும் வாய்ப்பு உள்ளது என பேராசிரியர் கிறிஸ்டப் ஜாப்ரலெட் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
தி இந்து:
- இந்தி தெரியவில்லை என்றால் வகுப்பில் இருந்து வெளியேறுங்கள். தமிழக யோகா மருத்துவர்களுக்கு, மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளார் வைத்யா ராஜேஷ் கோச்சா மிரட்டல்..
- குடந்தை கருணா
22.8.2020
No comments:
Post a Comment