ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 23, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

இந்தியன் எக்ஸ்பிரஸ் :



  • காங்கிரஸ் கட்சியில் பெரும் மாற்றமும், சீரமைப்பும் செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தலைவர் சோனியா காந்திக்கு முன்னாள் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் விரிவான கடிதம் எழுதி யுள்ளார்கள்.’

  • சென்ற ஆண்டு புதுடில்லியில் தப்லீக் ஜமா அத் மாநாட்டில் கலந்து கொண்டதால் தான் கரோனா பரவியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மும்பையில் வெளி நாட்டினர் உள்ளிட்ட 29 பேர் மீது பதியப்பட்ட முதல் குற்றப் பத்திரிக்கையை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தப்லீக் ஜமா அத் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அவர்களைப் பகடைக்காயாக ஆக்கி, குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்லாமியர்களை அச்சுறுத்தவே இந்த நடவடிக்கை என நீதிமன்றம் அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.


இந்தியா டுடே:



  • வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தனது குற்றச்சாட்டை நிரூபிக்கவிடுங்கள். அவர்மீதான தண்டனையைக் கைவிடுங் கள் என முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜி கூறியுள்ளார்.


இந்துஸ்தான் டைம்ஸ்:



  • அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது நடைபெற்று வரும் வழக்கை செப்டம்பர் 30-க்குள் முடித்திட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


- குடந்தை கருணா


23.8.2020


No comments:

Post a Comment