திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிமுறை வெளியீடு: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 17, 2020

திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிமுறை வெளியீடு: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னை, ஆக. 17- வங்கி ஊழியர்கள், 100 சதவீதம் வேலைக்கு வரவேண்டும். வழக்கமான நாட்களில் வழங் கப்படும் வங்கிச் சேவைகளை தற்போது வழங்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது.


இந்த அறிவிப்பு, மத்திய-மாநில அரசுகளின் விதிகளை மீறும் வகையில் இருப்பதாகக் கூறி தமிழ்நாடு வங்கி ஊழி யர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் வருகிற 20ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தது.


இதையடுத்து வங்கி ஊழியர்கள் சம்மேளனம், மாநில வங்கியாளர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் வங்கி நிர்வாக அதிகாரிகளு டன், தொழிலாளர் நல துணைக் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிமுறை வெளியிடப்பட் டுள்ளது.


அதில், ‘ஊழியர்கள், 100 சதவீதம் வேலைக்கு வரவேண் டும் என்ற வழிமுறை மாற்றப் பட்டு, 50 சதவீத ஊழியர்கள், சுழற்சி முறையில் வரவேண் டும். மீதம் உள்ள அனைத்து வழிமுறைகளும் தொடரும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.


இதைத் தொடர்ந்து, வருகிற 20-ஆம் தேதி அறிவிக் கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சி.எச்.வெங்கடாச் சலம் அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment