எவையெல்லாம்
ஒட்டகங்கள் அல்லவோ
எவையெல்லாம்
குதிரைகள் அல்லவோ
எவையெல்லாம்
பூனைகள் அல்லவோ
அவையெல்லாம்
ஆட்டுக்குட்டிகள் என்றான்
வில்லியம் ஜோன்ஸ்
என்ற வெள்ளைக்காரன்.
சிங்கம்
புலி
கரடி
யானை
எல்லாம்
மே... மே...என்று
கத்தத்தொடங்கின.
- திருநாவுக்கரசன் மனோரஞ்சிதம்
பேஸ்புக்கிலிருந்து...
No comments:
Post a Comment