பிள்ளையாருக்கு அனுமதியில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 14, 2020

பிள்ளையாருக்கு அனுமதியில்லை


கரோனாவால் ஊரடங்கு உள்ள நிலையில் பொது இடங்களில் பிள்ளையார் பொம்மையை வைக்கவோ, பொம்மைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ அனுமதியில்லை - தமிழ்நாடு அரசு ஆணை. (பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண் டும் நடக்கும் கலவரம் இவ்வாண்டு இல்லை என்பது நற்செய்தியே!)


 


ராமனை நம்பியோர்?



ராமன் கோயில் அறக்கட்டளைத் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸ் என்பவருக்குக் கரோனா தொற்று!


 


மனிதநேயம்



கரோனாவால் பாதிக்கப்பட்ட 40 காவல்துறையினரால் பிளாஸ்மா கொடை - என்னே மனிதநேயம்!


 


ஹாங்காங்கில் பத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கிக் குவிக்கும் மக்கள்



ஹாங்காங், ஆக.14 ஹாங் காங்கில் பத்திரிக்கை சுதந்தி ரத்தை ஆதரிக்கும் விதமாக மக்கள் ஆப்பிள் டெய்லி செய்தித்தாளை வாங்கிக் குவிக்க தொடங்கியுள்ளனர்.


ஹாங்காங்கில் 'நெக்ஸ்ட் டிஜிட்டல்' என்ற நிறுவனம் சார்பில் 'ஆப்பிள் டெய்லி 'என்கிற தினசரி செய்தித்தாள் பிரசுரமாகி வருகிறது. இந்த செய்தித்தாளில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதி ராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர் சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட வேண்டும் என் றும் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகிறது.


இந்நிலையில் ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் நிறுவனரான 72 வயதான ஜிம்மி லாய் மற்றும் அவரது 2 மகன்களை ஹாங்காங் காவல்துறையினர் தேசிய பாது காப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹாங்காங் காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் செயல் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இந்த நிலையில் ஹாங்காங்கில் பத்திரிகை சுதந்திரத்தை ஆதரிக்கும் விதமாக மக்கள் ஆப்பிள் டெய்லி செய்தித்தாளை வாங்கிக் குவிக்க தொடங்கியுள்ளனர்.


No comments:

Post a Comment