அறிஞர் அண்ணாவின் 112ஆவது பிறந்த நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 15, 2020

அறிஞர் அண்ணாவின் 112ஆவது பிறந்த நாள்

பெரியார் திடலில் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து  மரியாதை



அறிஞர் அண்ணாவின் 112ஆவது பிறந்த நாளான இன்று (15.9.2020) சென்னை பெரியார் திடலில் அமைக்கப்பட்டிருந்த அண்ணா அவர்களின் உருவப் படத்திற்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். கழகப் பொருளாளர் வீ.குமரேசன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக் குரைஞர் சு. குமாரதேவன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத் தினர்.  இந்நிகழ்ச்சியில் பெரியார் சமூக காப்பணி மாநில அமைப்பாளர் சோ. சுரேசு, வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ. கணேசன், துணைத் தலைவர் கி. இராமலிங்கம், அமைப்பாளர் புரசை சு. அன்புச்செல்வன், ஓவியர் பெரு. இளங்கோவன், ஆர்.என். முகம்மது, த. மரகதமணி, நிழற்பட கலைஞர் பா.சிவகுமார், இசையின்பன், வை.கலை யரசன், க.கலைமணி, மு.ரெங்கநாதன், கே. பாண்டு ரங்கன், சைதை ப. ஆனந்தன், அ. விமல்ராசு, ஜே.பி. ஆனந்த், சி.விஜய், எஸ். மதன், எஸ். இராமச்சந்திரன், ம. சக்திவேல் உள்ளிட்ட தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment