காரைக்கால் மண்டல திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஜி.கே. நாராயணசாமி (வயது 75). அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை புதுவை மாநில கழகத் தலைவர் சிவ. வீரமணி அவர்கள் மூலம் இன்று (15.9.2020) காலை அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தோம்.
இளமைக் காலத்திலிருந்தே - அவருடைய தந்தையார் சுயமரியாதைச் சுடரொளி - வேலன் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் காசி விசுவநாதன் அவர்களின் காலம் முதலே நன்கு அறிவோம். தமது முதுமை காரணமாக அவர் மறைந்தார் என்று அறிகிறோம். இயக்கப் பணிகளில் குன்றா ஆர்வமும், நம்மிடம் மிகுந்த அன்பும் கொண்டிருந்த தோழர் அவர்!
அமெரிக்காவில் சென்ற செப்டம்பரில் நடைபெற்ற சுயமரியாதை மனிதநேய மாநாட்டுக்கு வந்து மகிழ்வுடன் அனைவருடனும் கலகலப்பாக பேசி, படமெடுத்து மகிழ்ந்தவர்.
அவரது மறைவால் வாடும் அவரது வாழ்விணையர், குடும்பத்தினர், காரை திராவிடர் கழகம், புதுவை திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.9.2020
No comments:
Post a Comment