மத்திய பிரதேசம் - ஜபல்பூரில் தந்தை பெரியாரின் 142-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 26, 2020

மத்திய பிரதேசம் - ஜபல்பூரில் தந்தை பெரியாரின் 142-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா


ஜபல்பூர், செப்.26 மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் நகர் - ராம்பூர் பகுதியில்  தந்தை பெரியாரின் 142-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, செப்டம்பர் 17 (2020) அன்று சிறப்பாகக் கொண் டாடப்பட்டது.


பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஜனதா தள (சரத் யாதவ் அணி)க் கட்சியின் மத்தியப் பிரதேச மாநிலத் தலைவர் ராம்ரத்தன் யாதவ், அம்பேத்கர் அவர்களின் பெயரன் பிரகாஷ் அம்பேத்கர் தலை மையிலான வான்ஜித் பகுஜன் ஆகாடி கட்சியின் மத்தியப் பிரதேச மாநிலப் பொதுச் செயலாளர் மனோஜ் பாகமரே மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தாழ்த்தப்பட்ட & பழங்குடி ஊழியர் நலச் சங்கத்தின் இணைச் செயலாளர் ராஜேந்திர வன்கடே ஆகியோர் பங் கேற்று தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக் களுக்கு ஆற்றிய சமுதாயப் பணி பற்றி விரிவாகப் பேசினர். நிகழ்ச்சிகள் முழுவதையும், ஜபல்பூர் வாழ் தமிழ ரான ஆர்.கே. சந்திரசேகர் ஏற்பாடு செய்து, ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்.


தந்தை பெரியார் பற்றிய செய்திகள் இளைய தலைமுறையினருக்கு புதிய செய்தியாகவும் மூத்தோருக்கு கூடுதல் செய்தியாகவும் இருந்தன.


No comments:

Post a Comment