பா.ஜ.க. மனீஷ்பாண்டேயின் பாலியல் சீண்டல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 26, 2020

பா.ஜ.க. மனீஷ்பாண்டேயின் பாலியல் சீண்டல்

அடித்து உதைத்து பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைப்பு



கான்பூர், செப்.26 உத்தரப் பிரதேசம் கான்பூர் நகரத்தின் பாஜக தலைவர் மனீஷ் பாண்டே என்பவர் முதலாம் ஆண்டு கல்லூரி செல்லும் மாணவி ஒருவரை சில மாதங் களாக பின் தொடர்ந்து பாலி யல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். ஏற்கெனவே திருமணமான இவர் அந்த மாணவியை தன்னுடன் வந்துவிடு என்றும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துவிடுகிறேன் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் அந்த மாணவி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறினார், அவரது பெற்றோரும் அவர் ஆளும் கட்சி பிரமுகர் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர் என்பதால் அவரிடம் சென்று உங்கள் பதவிக்கு இப்படி செய்வது நல்லதல்ல என்று கூறியுள்ளனர்.


 இந்த நிலையில் அவர் மீண்டும் மாணவியை பாலியல் ரீதியாக சீண்ட ஆரம் பித்து விட்டார். இதனை அடுத்து அந்தப் பெண் தனது குடும்பத்தாருடன் சென்று காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறை புகாரைப் பதிவு செய்யாமல் பெண்ணின் குடும் பத்தாரை மிரட்டி அனுப்பி விட்டனர்.


 தன் மீது அந்த மாணவி புகார் அளித்ததைக் கண்டு ஆத்திரமுற்ற மனீஷ்பாண்டே சாலையில் சென்றுகொண்டு இருந்த மாணவியிடம் தகராறு செய்து அவரது ஆடையைக் கிழித்துள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரைப் பிடித்து அடித் துள்ளார், அந்த மாணவியும் செருப்பால் அடித்துள்ளார்.


 இந்த நிலையில் மக்கள் அதிகம் கூடியதைக் கண்டு தனது ஆதரவாளர்களுக்கு போன் செய்து அழைத்துள்ளார். அங்கு வந்த சில பாஜகவினர் அம்மக்களை மிரட்டத் தொடங்கியுள்ளனர். இதனைக் கண்ட பொதுமக்கள் மேலும் ஆத்திரமடைந்து மனீஷ் பாண்டே மற்றும் அவரது ஆதரவாளர்களை சாலையில் தாக்கியுள்ளனர். பின்னர் அவனைவரையும் பிடித்து இழுத்துச்சென்று கான்பூர் நகர் காவல்துறையிடம் ஒப் படைத்துள்ளனர்.


மேலும் இவர் மீது காவல் துறையினரிடம் ஏற்கெனவே புகார் உள்ள நிலையில் காவல் துறை அவர் மீது நடவடிக்கை எடுக்காததால் அவர் துணிச் சலுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்று கூறி காவல் துறையினரிடமும் பொது மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் கான்பூர் பாஜக தலைவர் மனீஷ்பாண்டே மற்றும் அவ ரது ஆதரவாளர்கள் இருவர் மீது புகார் பதிவு செய்தனர்,


இதுதொடர்பான காணொலி சமூவலைதளங் களில் பரவிய பிறகு இந்த செய்தி முக்கியத்துவம் பெற்றது, இது குறித்து கல்யான்பூர் காவல்துறை ஆய்வாளர் கூறிய தாவது ”மனீஷ்பாண்டே என் பவர் அப்பகுதியில் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாக புகார் அளித்தனர், இத னடிப்படையில் மனீஷ் பாண்டே மற்றும் அவரது உடன் இருந்தவர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய் துள்ளோம்'' என்று கூறினார். 


No comments:

Post a Comment