சென்னை, செப்.21 ரிசர்வ் வங்கி, சென்னை: சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் எஸ்.எம்.என்.சுவாமி, டாக்டர் கே.பாலு, வங்கி குறை தீர்ப்பாயம், மூத்த அதிகாரிகள், நல சங்கத்தின் செயலாளர்கள் ஜே.மதுமதி, கே.மீரா, உதவி பொருளாளர் மதன்குமார் மற்றும் வங்கியில் பணியாற்றும் தோழர்கள்கலந்து கொண்டுதந்தை பெரியார்படத்திற்கு மாலைஅணிவித்து சிறப்பித்தனர்.
யூனியன்பாங்க்ஆப்இந்தியா, சென்னை: நல சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். நடராசன், இணை செயலாளர் எஸ்.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தனர்.
சி.பி.சி.எல். மணலி, சென்னை: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் சார்பில் இராம.வேம்பையன், டி.துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள்அலுவலகத்தில், தந்தை பெரியார் படத்திற்கு மாலைஅணிவித்தனர்.
எல்.அய்.சி. அலுவலகம் சென்னை: இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்க நிர்வாகிகள் யோகநாதன், அந்தோனி, முரளி மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகத் தோழர்கள் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தனர்.
சேவா, பாட்னா (பீகார்): சோஷலிஸ்ட் பணியாளர் நல சங்கத்தின் சார்பில், பீகார் தலைநகர் பாட்னாவில் தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்பாகக் கொண் டாடப்பட்டது. அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின்துணைத் தலைவரும், யூனியன்வங்கிபிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் அகில இந்திய ஆலோசகருமான ரவீந்திரராம் தலைமை வகித்து உரையாற்றினார். அமைப்புச் செயலாளர்காம்லேஷ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment