திராவிடர் கழக இளைஞரணி சார்பில் உருவாக்கப்பட்ட 3டி அனிமேஷன் வடிவிலான
பெரியார் தாத்தா எனும் குழந்தைகள் பாடலை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
விருத்தாசலம், செப்.21- திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நடைபெற்ற 11 ஆவது சிறப்புக் கூட்டத்தில் 20.9.2020 அன்று குழந்தைகளுக்கான 3டி அனிமேஷன் பாடலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா வெற்றிகுமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் தலைமை வகித்தார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா ஜெயக்குமார், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ஈரோடு காமராஜ், ஆத்தூர் சுரேஷ், பொன்னமராவதி ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைவரை முன்மொழிந்து பேசினார். கோவை மண்டல இளைஞரணி செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் வழிமொழிந்து பேசினார்.
குழந்தைகளுக்கான 3டி அனிமேஷன் பாடலை உருவாக்கிய கரந்தை தமிழவேள் உமாமகேஸ்வரனார் கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் வடுவூர் எழிலரசன் அறிமுக உரையாற்றினார்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தொடக்க உரையாற்றினார். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் குழந்தைகளுக்கான 3டி அனிமேஷன் பாடலை வெளியிட்டு சிறப்புரை வாழ்வியல் உடையும் வழங்கினார்.
த.சீ. இளந்திரையன்
மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் பேசியதாவது: திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் நாட்டின் மிகச்சிறந்த ஆளுமைகளைக் கொண்டு தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது மேலும் அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 142 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு மூன்றாவது சிறப்பு கூட்டமாக வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்கள் இளைஞர் அணிக்கு கிடைத்த பெரும் மகிழ்ச்சியாக நாம் இதை கொண்டாடுகிறோம். திராவிடர் கழக இளைஞரணி சார்பில் இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, எழுத்தாளர் இமையம், பேராசிரியர் அருணன், கவிஞர் நந்தலாலா, மதிமுக அரசியல் ஆய்வு மய்ய செயலாளர் செந்திலதிபன் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பதினோராவது கூட்டமாக நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பது நமக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கூடுதல் சிறப்பாக இளை ஞரணி சார்பில் கழக வரலாற்றில் முதன்முறையாக 3டி அனிமேஷன் வடிவில் பெரியார் எனும் பாடல் உருவாக்கப் பட்டு இருப்பது நமக்கெல்லாம் பெரும் மகிழ்வு ஆகும். இதனை தொடர்ந்து செயல்படுத்துவோம் என பேசினார்.
தஞ்சை இரா. ஜெயக்குமார்
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா ஜெயக்குமார் அவர்கள் உரையாற்றும்போது : அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 142 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கரந்தை தமிழவேள் உமாமகேசுவரனார் கலைக் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் முனைவர் வடுவூர் எழிலரசன் அவர்கள் முயற்சியால் குழந்தைகளுக்கான பெரியார் தாத்தா எனும் 3டி வடிவிலான பாடல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் வெளியிடப் பட உள்ளது. இந்நிலையில் தந்தை பெரியார் அவர்களின் 142ஆவது பிறந்தநாளை கொண்டாட கூடிய வகையிலே கழகத் தோழர்கள் கழக இளைஞரணி தோழர்கள் ஒவ்வொரு வரும் உரிய பாதுகாப்புடன் சென்று விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணியில் ஈடுபடவேண்டும். இளை ஞரணி சார்பில் ஏரா ளமான விடுதலை சந்தாக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்க வேண்டும் என பேசினார்.
பேராசிரியர் எழிலரசன்
பேராசிரியர் எழிலரசன் பேசியதாவது: குழந்தைகளுக்கான இலக்கியங்கள் அரிதாகி வரக்கூடிய இந்த காலகட்டத்தில் அனிமேஷன் வடிவில் பெரியார் தாத்தா கொண்டு வரப்பட் டுள்ளது. சோட்டா பீம், மோட்டு பட்லு போன்ற குழந்தை களுக்கான கதைகள் பொதுவாக சனாதனத்தை கற்பிக்கக் கூடியவையாக இருக்கின்றன. எனவே குழந்தைகளுக்கு பகுத்தறிவு ஊட்டக்கூடிய வகையில் பெரியார் தாத்தா உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ அன்புராஜ் அவர்கள் பேசியதாவது: அறிவுலக பேராசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 142 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 3டி அனிமேஷன் கார்ட்டூன் வடிவிலான பெரியார் தாத்தா பாடல் வெளியிடப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் கழக இளைஞரணி தோழர்கள் அடுத்தகட்ட அறிவியல் வளர்ச்சிக்கு சென்ற இடத்தில் இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.
குழந்தைகள் பிறக்கும் போது பகுத்தறிவாளர்களாக தான் பிறக்கிறார்கள் அவர்கள் நல்ல புத்திசாலிகளாக இருக் கிறார்கள். குழந்தைகள் வளர்க்கப்படும் இடத்திலேயே மாற்றம் ஏற்படுகிறது. குழந்தைகளை பகுத்தறிவாளர்களாக நல்ல அறிவாளிகளாக வளர்ப்பதற்கு இது போன்ற பாடல்கள் உதவும். எனவே, இந்தப் பணியை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும் என பேசினார்.
தமிழர் தலைவர் உரை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசியதாவது: இளைஞரணி சார்பில் சிறப்பான ஏற்பாடாக குழந்தைப் பாடல் அமைந்துள்ளது. பிரச்சாரங்களை பல்வேறு வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் அதிலே குறிப்பாக உரையாடல் , நாடகம் என அனைத்துத் தளத்திலும் ஈடுபட வேண்டும்.
குழந்தைகளுக்கான பாடலை உருவாக்கியுள்ள பேராசிரியர் எழிலரசன் அவர்களின் முயற்சி பாராட்டுக் குரியது. கரோனா காலத்தில் உலகமே அடங்கிய நிலையில், பெரியார் தொண்டர்களுக்கு முடக்கம் இல்லை எனும் அளவில் பணியாற்றும் தோழர்களுக்கு பாராட்டுகள். தோழர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனப் பேசினார்.
நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில இளை ஞரணி தலைவர் ராஜா, சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், திருச்சி மண்டல இளை ஞரணி செயலாளர் முனைவர் வீ.அன்புராஜா, மதுரை மண்டல இளைஞரணி செயலாளர் இரா.அழகர், விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர் தா. இளம்பரிதி, கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் மணித்துரை, சோழிங்கநல்லூர் மாவட்ட இளை ஞரணி தலைவர் நித்தியானந்தம், ஈரோடு மண்டல இளைஞரணி செயலாளர் ஜெபராஜ் செல்லதுரை, தருமபுரி மண்டல இளை ஞரணி செயலாளர் வ.ஆறுமுகம், சேலம் மண்டல இளைஞரணி செயலாளர் கூ. செல்வம்.
உரத்தநாடு இரா. குணசேகரன்
மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, மாநில துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி மாநில அமைப்புச் செயலாளர்கள் வே.செல்வம், வி.பன்னீர்செல்வம் , ஊமை ஜெயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, வேலூர் மண்டல செயலாளர் சடகோபன், பட்டாபிராமன், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் தஞ்சை மாநகர இளைஞரணி அமைப்பாளர் பெரியார் செல்வம், கடலூர் மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் ரமாபிரபா ஜோசப், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வீரபத்திரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன், ஞானசேகரன், ஆத்தூர் மாவட்டச் செயலாளர் ஆதவன், தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மாவட்டச் செயலாளர் வே.முருகன், தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன், மத்தூர் அரங்க .ரவி கோவை குணசேகரன், பிரான்ஸ் ரமேஷ் , நீடாமங்கலம் ரமேஷ், கடலூர் மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் தஞ்சை வெங்கடேசன், செந்துறை அறிவன், ஆண்டிமடம் கார்த்திக், தென் சென்னை மணித்துரை, சிவசீலன், வாழப்பாடி வேல்முருகன், சோழிங்க நல்லூர் நித்தியானந்தம், சோழவரம் சக்ரவர்த்தி, தேவா, தென்காசி கோபால், கோவை திராவிடமணி, உசிலை முத்துக் கருப்பன், தாம்பரம் சுரேஷ், விருத்தாசலம் சிலம்பரசன், வெங்கட.இராசா, புதுக்கோட்டை யோகராஜ், அல்லூர் பாலு, ராஜமாணிக்கம், துரைராஜன் உள்பட பலர் கலந்து உட்பட பலர் கொண்டனர்.
மாநில மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைய வழியாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
நிறைவாக, சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் நன்றி கூறினார்.
தொகுப்பு:
த.சீ.இளந்திரையன்
No comments:
Post a Comment