ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 21, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:



  • கரோனா தொற்று காரணமாக மோடி அரசு எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் முழு ஊரடங்கை அறிவித்ததனால்தான், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்தது என மக்களவையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

  • விவசாய நாடான இந்தியாவை, கார்ப்பரேட் நாடாக மாற்ற மோடி அரசு முயற்சிக்கிறது என தெலுங்கானா முதல் வர் கே.சந்திர சேகர ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சியின் எம்.பி. கேசவ ராவ் கடுமையாக மாநிலங்களவையில் எதிர்த்து பேசினார்.

  • மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புகளுக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் இரண்டு வேளாண் மசோதாக்களை மோடி அரசு நிறைவேற்றியது. மசோதா நகலைக் கிழித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

  • ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பி.ஜே.டி. கட்சியும் மோடி அரசின் வேளாண் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னை:



  • மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாக்களை நிறைவேற்றும் மா நிலங்களவைத் துணைத் தலைவர் ஹர்வன்ஷ் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை காங்கிரஸ், திமுக, திரினாமூல் உள்ளிட்ட 12 எதிர்கட்சிகளின் சார்பில் நூறு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, மாநிலங்களவை செயலகத்தில் தந்துள்ளனர்.

  • வேளாண் மசோதாக்களை மக்களவையில் ஆதரித்துவிட்டு, மாநிலங்களவையில் எதிர்க்கும் அதிமுகவின் இரட்டை நிலைப் பாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.


தி டெலிகிராப்:



  • நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வேளாண் மசோதா, விவசாயிகளுக்கு எழுதப்படும் மரண சாசனம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • சீனாவிற்கு இந்திய ராணுவ ரகசியங்களை தந்ததாக டில்லி காவல் துறையால் கைது செய்யப்பட்ட ராஜீவ் சர்மா பற்றி, மோடி அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எதுவும் அறியாதவரா? என்ற கேள்வி எழுகிறது என டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • மாநிலங்களவையில் பி.ஜே.டி., சிரோன்மணி அகாலிதளம், டி.ஆர்.எஸ். ஆகிய கட்சிகளும் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தங்களுக்கு போதிய ஆதரவு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட மோடி அரசு, குரல் வாக்கெடுப்பு என்ற முறையில் மசோதாக்களை, விதிகளுக்குப் புறம்பாக நிறைவேற்றியுள்ளது என திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் டிரெக் ஓ பிரைன் குற்றம் சாட்டியுள்ளார்.


தி இந்து:



  • மோடி அரசின் மசோதாக்கள் விவசாயிகளை, விவசாயக் கூலிகளாக மாற்றிவிடும். அவர்களின் நிலங்கள் பெரும் நிறுவனங் களால் கைகொள்ளப்படும் என அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்ர மணியன், மாநிலங்களவையில் பேசினார்.


- குடந்தை கருணா


21.9.2020


No comments:

Post a Comment