மாவட்டத் தலைநகரங்களில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இடங்கள்!
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 21-9-2020 அன்று காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றி யுள்ள மூன்று சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் - அதற்கு துணை போகும் ஆளும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும் மாவட்டத் தலைநகரம் - நகரம் - ஒன்றியம் - பேரூர்களில் நடைபெற உள்ள “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் இடங்கள் வருமாறு:
கலந்து கொள்வோர் மாவட்டம்
மு.க.ஸ்டாலின் அவர்கள், - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்
கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், - சென்னை மேற்கு
துணைத் தலைவர், திராவிடர் கழகம்,
கே.எஸ்.அழகிரி அவர்கள், - சென்னை வடக்கு
தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,
வைகோ, எம்.பி., அவர்கள், - சென்னை தெற்கு
பொதுச்செயலாளர், ம.தி.மு.க..,
கே. பாலகிருஷ்ணன், அவர்கள், - சென்னை கிழக்கு
செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
இரா. முத்தரசன், அவர்கள், - தஞ்சாவூர்
செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் அவர்கள் - திருச்சி
தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,
தொல். திருமாவளவன், எம்.பி., அவர்கள், - கடலூர்
தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள், - தாம்பரம்
தலைவர், மனித நேய மக்கள் கட்சி
ஈ.ஆர். ஈஸ்வரன் அவர்கள், - கோவை
பொதுச்செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி
ரவி பச்சமுத்து, அவர்கள் - பெரம்பலூர்
தலைவர், இந்திய ஜனநாயக கட்சி
மேற்கண்ட மாவட்டங்களைத் தவிர, மற்ற மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொள்வோர் - நடைபெறும் இடம் ஆகியவற்றை, மாவட்ட தோழமைக் கட்சித்தலைவர்களுடன் கலந்து பேசி, முடிவு செய்து, அதனை பத்திரிகைச் செய்தியாக அளித்திட வேண்டுமென மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment