தெறிக்க விட்ட டி-சர்ட் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 12, 2020

தெறிக்க விட்ட டி-சர்ட்

டி-சர்ட் போட்டு தமிழை வளர்க்க முடியுமா? இல்லை!


ஆனால்...



வானதி சீனிவாசன் முதலான தமிழக பாஜகவினர். டிஷர்ட் போட்டால் தமிழை வளர்க்க முடியுமா... என்று கேலியாக கேட்கிறார்கள்.  உண்மைதான் வளர்க்க முடியாதுதான். தமிழ் வளர்ச்சிக்கென ஆளும் அரசுகள் நிறைய நிதி ஒதுக்க வேண்டும். அக்கறை காட்டவேண்டும்.


ஆனால் உண்மை நிலவரம் சொல்லட்டுமா..


கடந்த மூன்றாண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தியாவில் யாருமே உபயோகிக்காத செத்த மொழியான சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கென செலவிட்ட தொகை 643 கோடி..  இது மத்திய கலாச்சாரத்துறை பாராளுமன்றத்தில் தந்த தகவல்தான் இது.


ராஷ்டிரிய சன்ஸ்க்ரித் சன்தான் என்கிற அமைப்பை நிருவி அதன்மூலம் சமஸ்கிருத மொழியை நாடெங்கும் வளர்ப்பதற்காக கிளைகளை அமைத்து பல நூறுகோடிகளில் திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.


சமஸ்கிருதத்துக்கு பண்ணினால் உனக்கேன் வயிறு எரிகிறது என்று கேட்கலாம். இதே மூன்றாண்டுகளில் தமிழ் முதலான செம்மொழிகளுக்கு மத்திய அரசு செலவிட்ட தொகை என்ன தெரியுமா?


தமிழ், மலையாளம், ஒடியா, கன்னடம், தெலுகு என ஐந்து மொழிகளுக்குமான அதன் வளர்ச்சிக்கென மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி மொத்தமாக 25 கோடி. இந்த 25 கோடியை வைத்துதான் தென்னிந்திய மொழிகளை மொத்தமாக வளர்த்துக்கொள்ள வேண்டுமாம்...



ஒருபக்கம் தென்னிந்திய மொழிகளை அழிக்கிற வேலைகளை முன்னெடுப்பது... இன்னொரு பக்கம் செத்த மொழியான சமஸ்கிருதத்தை வளர்க்கப்பாடுபடுவது. இதுதான் இந்த சங்கிக்கூட்டம் தமிழ் வளர்க்கும் லட்சணம். சும்மா பொதுக்கூட்டத்தில் மேடையில் இரண்டு திருக்குறளை நாய்க்கு போடுகிற எலும்புபோல போடுவது அல்ல அசலான தமிழ் வளர்ச்சி. தமிழ் ஆராய்ச்சிகளுக்கென என்ன மாதிரியான முன்னெடுப்புகளை செய்கிறீர்கள் என்பதல்லவா முக்கியமானது.


தமிழை மற்ற மொழி பேசும் மாநிலங்களிலும் கொண்டு சேர்ப்பது, அதன் சிறப்பை வலியுறுத்தும் வகையில் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்ப்பது, செத்த மொழி ஆராய்ச்சிக்கு அதிகமாக நிதி ஒதுக்கிவிட்டு புழக்கத்தில் இருக்கிற தொன்மையான பண்பாட்டு பின்புலமும் வரலாறும் கொண்ட தமிழை மாற்றாந்தாய் மனோபாவத்தோடு ஒடுக்க முனைவது என்பதெல்லாம்தான் இந்த சங்கிகள் தமிழ்மீது காட்டும் அக்கறை.


சமஸ்கிருத ஏஜென்டுகளாக ஒருபக்கம் நடந்துகொள்வதையும், இன்னொருபக்கம் தமிழ்க்காவலர்களைப் போல வேடம் புனைவதையும் நிறுத்துவிட்டு உருப்படியாக ஏதாவது செய்யப்பாருங்கள். அல்லது தமிழர்களின் உண்மையான தமிழ் உணர்வை கொச்சைப்படுத்தாமலாவது இருங்கள்.


டிஷர்ட் போட்டால் தமிழ்வளருமா தெரியாது ‘இந்தி திணிப்புக்கு எதிரான உணர்வு வளரும். Not இந்திக்கு எதிரான உணர்வு.


- அதிஷா, முகநூலில்...


No comments:

Post a Comment