ஒடுக்கப்பட்ட மக்களால் என்றும் மறக்கப்படவே முடியாத - மறக்கப்படவே கூடாத பொன்னாள் 13.9.1928. ஆம்; இந்நாளில்தான் மரியாதைக்கும், மிகுந்த போற்றுதலுக்கும் உரிய எஸ்.முத்தையா முதலியார் அவர்களால் முதன் முதலாக வகுப்புவாரி உரிமை ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள். இதற்காக தந்தை பெரியார் குடிஅரசு இதழில் (11-11-1928) மந்திரி எஸ்.முத்தையா முதலியார் வாழ்க, வாழ்கவே! என்று எழுதினார்.
1921 முதல் நீதிக்கட்சி ஆட்சியில் பல்வேறு சட்டங்கள் இந்த வகையில் பிறப்பிக்கப்பட்டாலும், 1928இல் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்ற எஸ். முத்தையா முதலியார் அவர்களால் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம்தான் (ஆணை எண். 744 பொது, நாள் 13-9-1928) முறையான வகுப்புவாரி பிரதி நிதித்துவத்தை நிர்ணயித்து செயல்படுத்தப்பட்டதாகும்.
அதன்படி மொத்தம் 12 இடங்கள் என்றால் அதில், இந்து பார்ப்பனரல்லாதாருக்கு 5 இடங்கள், பார்ப்பனர்களுக்கு 2 இடங்கள், இசுலாமியர்களுக்கு 2 இடங்கள், கிறித்துவர்களுக்கு 2 இடங்கள், ஆங்கிலோ இந்தியர் உட்பட பிறருக்கு 1 என்று ஆணை பிறப்பித்தார்.
No comments:
Post a Comment