வேலூர் இரா.ஓம்பிரகாஷ்-ஓ.நிர்மலா ஆகியோர் தமிழர் தலைவர் தலைமையில் 16.9.1981 அன்று மணம் புரிந்து கொண்டனர். மணநாளின் 40ஆம் ஆண்டின் (16.9.2020) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங் கினர். வாழ்த்துகள்! நன்றி!
- - - - -
சுயமரியாதை சுடரொளி கெடார் சு.நடராசன்- சவுந்தரி நடராசன் மகன் செஞ்சி ந.கதிரவன்-வெண்ணிலா இணையரின் 21ஆம் ஆண்டு இணையேற்பு விழா (16.9.2020) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை ரூ.300 அளிக்கப்பட்டது.
- - - - -
சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஆர்.பி.சண்முகம் தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 14.9.2020 அன்று பெரியார் அறக்கட்டளைக்கு ரூ.25,000 மற்றும் 'விடுதலை' ஓர் ஆண்டு சந்தா தொகை ரூ.1900 என காசோலையாக நன்கொடை வழங்கியுள்ளார்.
- - - - -
திராவிடர் கழகத்தின் மேனாள் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் (16.9.2020) முன்னிட்டு குடும்பத்தினர் சார்பில் அவர் பெயரன் வ.ஸ்டாலின் ரூ.2000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment