PeriyART 142 - ஓவியப் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 7, 2020

PeriyART 142 - ஓவியப் போட்டி

தலைசிறந்த சீர்திருத்தவாதியும், புரட்சியாளரும், மானுடப் பற்றாளருமான தந்தை பெரியாரின் 142ஆம் பிறந்தநாளையொட்டி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் போட்டி ஒன்றை நடத்தவுள்ளது.


தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் எவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.


கோட்டோவியம் தொடங்கி டிஜிட்டல் ஓவியம் வரை பல்வகை ஓவியங்களையும் (Illustration, Painting, Line Art, Digital art and alike) போட்டிக்கு வரவேற்கிறோம்.


தந்தை பெரியாரை ஓவியமாக்குதல் என்பதோடு இப் போட்டியைச் சுருக்கிக் கொள்ள வேண்டியதில்லை. (பெரியார் ஓவியங்களும் இடம்பெறலாம்.)


இன்னும் விரிவாக, மூடநம்பிக்கை ஒழிந்த, ஜாதி ஒழிந்த, பெண்ணுரிமைச் சிந்தனைகள் பூத்த, ஒடுக்கப்பட்டோரின் உரிமை மீட்கப்பட்ட புதியதோர் உலகினைப் படைக்க விரும்பிய தந்தை பெரியார் கருத்துகளை முன்னிறுத்துவதாகவும் படைப்புகள் இருக்கலாம்.


(அ). போட்டிக்கான காலம்:


07.09.2020 முதல் 13.09.2020 வரை


(ஆ). பங்கேற்போர் தகுதி:


யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.


(இ). படைப்புகளை அளிக்கும் முறை:


கூகுள் ஃபார்ம்ஸ் (Google Forms) மூலம் https://bit.ly/PeriyART142  


(ஈ) பரிசுகள்:


தந்தை பெரியாரின் சிலை, பெரியார் படம் பொறித்த டி-சர்ட்கள், தேநீர் கோப்பை.


சான்றிதழ்கள்


போட்டி விதிகள்:



  1. போட்டியில் பங்குபெறும் படைப்புகள் அனைத்தும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உடைமையாகும். இந்நிறு வனம் அப்படைப்புகளை எதிர்காலத்தில் தாம் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ள முழு உரிமையுண்டு. இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்பாளர்கள், இப் படைப்புகளை எதிர் காலத்தில் உரிமம் விலக்கி (License free) பயன்படுத்துவதற்கான ஒப்புகைக் கடிதத்தில் கையொப்பமிட வேண்டும்.

  2. படைப்புக்கான விதிமுறைகளைத் தெளிவாகப் பங்கேற் பாளர்கள் படித்துப் புரிந்துகொள்ளல் நன்று.

  3. போட்டிக்கான படைப்புகளை 13.09.2020க்குள் அனுப்பிட வேண்டும். அத் தேதிக்குள் வந்துசேரும் படைப்புகள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

  4. படைப்புகளின் மூலங்களான ஒளிவருடிய நகல்களையும் (scanned copy), மூல டிஜிட்டல் கோப்புகளையும் (Digital source files) படைப்பாளர் அனுப்பி வைக்க வேண்டும். படைப்பை விரைந்து மதிப்பிட அவை பயன்படும்.

  5. போட்டிக்கு அளிக்கப்படுபவை படைப்பாளரின் முழுமை யான சொந்தப் படைப்பாக (Original work) இருக்க வேண்டும்.

  6. போட்டியாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட படைப்புகளையும் அனுப்பலாம்.

  7. தங்கள் படைப்புகளை போட்டிக்குத் தக்க வகையிலான கோப்புகளாக (optimize) பதிவேற்றம் செய்யவும்.

  8. கருத்துருவாக்கம், எழுத்துரு வகை, வரைகலை வடிவமைப்பு, பயன்படுத்தியுள்ள வண்ணங்கள் - கூறுகள், படைப்பு வெளிப் படுத்தும் செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த படைப்பு கள் தேர்ந்தெடுக்கப்படும்.

  9. பதிப்புரிமை, வணிகக்குறி பெற்றவை இடம்பெறக் கூடாது.

  10. நடுவர்களின் முடிவே இறுதியானது.

  11. பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் அனைத்தும் தந்தை பெரியார் அவர்களின் 142ஆம் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று வெளிவரும் சிறப்பிதழ்களிலும், periyar.org  இணையத் திலும் வெளியிடப்படும்.


விவரங்களுக்கு:


https://www.facebook.com/periyarthereformer 
https://www.instagram.com/periyarthereformer/


No comments:

Post a Comment