கொள்கைக் குன்றாக தலைநிமிர்ந்து கொடிய இன விரோதிகளின் பார்ப்பனர்களின் பல்வேறு சூழ்ச்சியை யும், இனத்துரோகிகளின், விபீஷணரின் - கோடாரிக் காம்புகளின் இன விரோத, மொழி விரோத அனைத்து எதிர்ப்புகளையும் நேருக்கு நேர் சந்தித்து கொள்கை ரீதியாக எதிர் நீச்சல் போடும் ஒரே பகுத்தறிவு நாளிதழ் 'விடுதலை' தவிர வேறு உண்டா? இலாபக் கணக்கைப் பார்க்காமல், இலட்சியக் கணக்கை மட்டும் பார்க்கும் ஒரே நாளிதழ் நம் விடுதலை மட்டுமே.
- இன்றைய ஊடகங்கள், பத்திரிகைகளின் நிலை என்ன? பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து விளம்பர வருமானங்களை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியையும், பகுத்தறி வையும் பரப்பி நல்வழி காட்ட வேண்டிய ஊடகங்கள் இன்று எதுவும் இல்லை. பரபரப்பு செய்திகள், கவர்ச்சி போதைகள் மடமைத்தனமான ஆன்மீகச் செய்தி களை பரப்பி மக்களை சிந்திக்க விடாமல் மடமையில் ஆழ்த்தி வருகின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை.
- எந்த பத்திரிகையாவது, ஊடகங்களாவது, பகுத்தறிவுக்கும், அறிவுப்பூர்வமான செய்திகளுக்கும் நேரம் ஒதுக்குகிறதா, இடம் ஒதுக்குகிறதா? ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாதா? அதற் குரிய அறிவு நாணயம், தைரியம், நேர்மை கிஞ்சிற்றும் இருக்கிறதா?
- தொலைக்காட்சி தொடர்களை சொல்ல வேண்டியதில்லை - தனியார் தொலைக்காட்சிகளில் நாள்தோறும் இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை, தொடர் சீரியல்கள் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி வருகின்றனர் குடும்பத்தில் மருமகள் - மாமியார் சண்டை - பரிகாரம் தேட சாமியாரிடமும், ஜோதிடரி மும் ஓடல் - மனிதப் பண்பு மனித நேயம் புரட்சி சிந்தனை ஏதேனும் இருக்கிறதா இந்த ஊடகங்களுக்கு.
- பெரியார் பிறந்த மண்ணில் - பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கூட்டம் பகுத்தறிவுக்கு எதிரான, இன உணர்வுக்கு எதிரான நச்சு விதைகளை, மயக்க மாத்திரைகளைக் கொடுத்து ஏமாற்ற பார்க்கின்றன. இங்கு நடக்குமா? உங்கள் பாச்சா பலிக்குமா? இது திராவிட பூமி - பெரியாரின் மண் - எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் - எந்த கபட வேடத்தில் வந்தாலும் அதனை சுக்கு நூறாக உடைத் தெறியும் ஆற்றல், ஆர்வம் பெரியார் கொள்கைக்கும் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணிக்கும் உண்டு, திராவிடத்தை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியுமா? வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
- தி.க. பாலு,
திண்டுக்கல் மாவட்ட பகுத்தறிவாளர்
கழக முன்னாள் தலைவர்
No comments:
Post a Comment