மலேசியாவில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - அசைக்க முடியாத அடித்தளம் பெரியாரின் சுயமரியாதைக் கோட்டை..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 19, 2020

மலேசியாவில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - அசைக்க முடியாத அடித்தளம் பெரியாரின் சுயமரியாதைக் கோட்டை..!

மலேசிய திராவிடர் கழக தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை சூளுரை



மலேசியத் திருநாட்டில் யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெரியாரின் சுயமரி யாதைக் கோட்டை அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்று மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர்   ச.த அண்ணாமலை 142 ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாள் விழாவில் சூளுரைத்தார்.


ஆயிரமாயிரம் கருத்துக்கள், விவாதங்கள், பொய்ப் பிரச்சாரங்கள் இங்கே நிகழ்ந்தாலும், அவற்றை எல் லாம் பகுத்தறிவு விவாதம் கொண்டு எதிர்கொள்ளும் ஆற்றலை பெரியார் இயக்கத்தில் உள்ள கழகத் தோழர்கள் கொண்டுள்ளார்கள் என்று மலேசிய தலைநகரான,கோலாலம்பூர் கிரான் பசிபிக் தங்கும் விடுதியில் நடந்த தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் மலேசிய திராவிடர் கழக தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.



உலகம் முழுவதும் உள்ள பெரியார் சிந்தனை யாளர்கள் 17.-09.-2020 வியாழக்கிழமை அன்று தந்தை பெரியார் 142 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடியதைப் போலவே, மலேசியாவிலும் பெரியார் பிறந்தநாள் விழா அதே நாளில் கொண் டாடப்பட்டது.  மலேசிய திராவிடர் கழக தேசிய நிர்வாகம் மிகவும் செம்மையாக ஏற்பாடு செய்திருந்த 142 ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாள் விழாவில் மானமிகு ச.த.அண்ணாமலை அவர்கள் சிறப்பு விழா மலரை வெளியிட்டார்.ஓவியர் இ.மங்கையர்க்கரசி வரைந்த பெரியார் ஓவியத்தை அய்யா வீரன் அவர்கள் கழகத் தலைவரிடம் வழங்கினார். மலேசிய தமிழ் நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா.திருமாவள வன் பெரியார் செய்த சாதனைகள், அவரின் ஆற்றல் மிக்க கருத்து, பெரியாரின் சமூகநீதி போராட்டம், கல்வி, பொருளாதாரம், சுயமரியாதைச் சிந்தனை, மனித நேயம் போன்ற பெரியாரின் போராட்டங்கள் குறித்தும், உலகலாவிய நிலையில் உள்ள திராவிட மக்கள் குறிப்பாக தமிழர்கள் தங்களின் வாழ்க்கை, வாழ்வாதா ரம், வளமிக்க சிந்தனை மாற்றம் என்று பெரியார் சிந்தித்த கருத்துகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். கவிஞர் எல்லிஸ் ஏலன் அவர்களும், கு.சத்தியாவும் பெரியார் சிறப்பு கவிதையை இயற்றி வாசித்தார்கள்.


அவர்களை தொடர்ந்து மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க நல்லுரையாளர் ஆசான் மன்னர் மன்னன் மருதை  தந்தை பெரியாரின் அடிப்படைக் கோட்பாடுகள், அவரின் போதனைகள், பெரியார் பெற்ற விருதுகள், பெரியாரின் வாழ்க்கையும் சமுதாய பங்களிப்பும், பெரியாரின் பொன்மொழிகள் என்றும் மேலும் பல செய்திகளை தனதுரையில் எடுத்து வைத்து பெரியார் 142 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவிற்கு மெருகூட்டினார்.



இவ்விழாவில் மலேசிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் சா.ர.பாரதி, பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம், பொருளாளர் கு.கிருட் டிணன் ,துணைப் பொதுச் செயலாளர் ச.நாகேன், அமைப்புச் செயலாளர் மு.இராதாகிருஷ்ணன், மகளிர் தலைவி சு.குமுதா, இளைஞர் தலைவர் பா.சோம சம்பந்தனார், மத்தியச் செயலவை பொறுப் பாளர்கள், நாடு தழுவிய நிலையில் இருந்து கழகத் தோழர்கள் என்று நிறைவாக கூட்டம் கோலாலம்பூர் கிரான் பசிபிக் அரங்கத்தை அழகு செய்தார்கள். பெரியார் 142 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை தோழர் யோகி சந்துரு சிறப்பாக வழிநடத்தினார். விழாவில் பெரியாரின் 142 ஆம் ஆண்டு விழா சிறப்பு மலர் இலவசமாக அனை வருக்கும் வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment