அன்புள்ளம் கொண்ட மதிப்புமிக்க ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
ஆகஸ்ட் 2020 திங்களில் ஆசிரியருக்கு கடிதம் பகுதியில் எழுதிய எனது எதிர்ப் பார்ப்புகளின் படியே தமிழர் தலைவர் அவர்கள் ஆறு நாள்கள் தொடர் பொழி வாக 19, 20, 21 ஆகிய மூன்று நூற்றாண்டில் தமிழகம், கருநாடகம் மற்றும் கேரளாவில் ஏற்பட்ட சமூக நீதி குறித்த வரலாற்று நிகழ் வுகளை, அவருக்கே உரித்தான ஆவணக் களஞ்சியங்களைத் திரட்டி வரலாற்றினை மிகத் தெளிவாக விளக்கிக் கூறினார்.
மேலும், மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர்களின் கூட்டத்திற்கு தலைமை ஏற்று தந்தை பெரியார் அவர்களின் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் மிக உற்சாகமாக "இல்லம் தோறும் பெரியார்" என்ற அளவில் நடத்துவது, தலைமைக் கழகத்தால் வழங்கப்படும் அறிவாசான் அவர்களின் வண்ணச் சுவரொட்டிகளை ஒட்டி காட்சிப் படுத்திட ஆசிரியர் அவர் கள் கழக நிர்வாகிகளுக்கும் கழகத் தோழர் களுக்கும் அன்புடன் பணித்தார்கள்.
இடையே வெள்ளுடையில் கருப்புச் சட்டை உணர்வோடு முதல்வராய் வலம் வந்த ஓமந்தூரார் அவர்களையும், சமூக நீதியின் அடையாளம் மண்டல் அவர் களை பற்றிய உரையையும் நிகழ்த்தி பெரும் தொற்று காலத்திலும் இடைவிடாது சொற்பெருக்காய் வழங்கி புத்துணர்வூட் டினார் ஆசிரியர் அவர்கள். மட்டிலா மகிழ்வு.
அதேபோன்று மானமும் அறிவும் ஊட்டிய தந்தை பெரியார் பிறந்த செப்டம் பர் 2020 திங்களிலும் எதிர்பார்ப்பைவிட அரிய தகவல்களை வியக்கும் வகையில் தமிழர் தலைவர் அவர்கள் வழங்குவார் என்று மகிழ்வான அந்த தருணத்திற்காக காத்திருக்கின்றோம்.
கனிவான
அ.இரா.முல்லைக்கோ பெங்களூரு-43
No comments:
Post a Comment