குவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஏன் மீட்கவில்லை?
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, அக். 28- கரோனா நோய் தொற்று காரணத்தி னால் குவைத் நாட்டில் சிக் கியிருக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தற்போது வரை மீட்கவில்லை என மத் திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக உடனடி தீர்வு காண நேற்று (27.10.2020) அதிரடி உத்தரவை பிறப்பித் துள்ளது.
கரோனா நோய் தொற்று இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பணி நிமித்தமாக சென்ற பலர் வெளிநாடுகளிலேயே சிக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், வெளிநாடுவாழ் தமிழர்கள் நல சங்கத்தின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில்,‘‘கரோனா காரண மாக குவைத் நாட்டில் ஆயி ரக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக 2 ஆயிரம் தமிழக தொழிலாளர் கள் உள்ளனர். அவர்களை மீட்டு கொண்டு வர வேண் டும் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசா ரித்த நீதிமன்றம் இதுகுறித்து எடுத்த நடவடிக்கை என்ன?, மேலும் அவர்களை மீட்கும் விவகாரத்தில் விமானம் உட் பட அனைத்து விவரங்களை யும் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த 6ஆம் தேதி உத்தரவிட்டிருந் தது.
இந்த நிலையில் மேற் கண்ட வழக்கானது உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் காணொலிமூலம் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் நட்ராஜ் வாதத் தில்,” இதுகுறித்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகிறது. மேலும் அங்கு இருக்கும் இந்திய தூத ரகத்துக்கு மத்திய வெளியுற வுத்துறை தரப்பின் மூலம் தகவல் அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. இது ஒரு சவாலான பிரச்சினையாக உள்ளது என நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். இதையடுத்து உத்தரவில், நாடு முழுவதும் தற்போது போக்குவரத்து உட்பட எந்த பிரச்சினையும் கிடையாது. அனைத்தும் ஓர ளவிற்கு முடிவுக்கு வந்துள் ளது.
அப்படி இருக்கையில் ஏன் குவைத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கவில்லை. குறிப்பாக தமிழகத்தின் சென் னையை சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் உணவுக்குக் கூட வழியில்லாமல் இருப்ப தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் அதுகுறித்து தற்போது வரை நடவடிக்கை எடுக்க வில்லை என மத்திய அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பி கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத் தில் உடனடியாக விரைந்து ஒரு தீர்வு காண வேண்டும். மேற்கொண்டு அவகாசம் கேட்பது சரியாக இருக்காது என உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
No comments:
Post a Comment