உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
புதுடில்லி, அக். 28- வேளாண் சட்டத்தை உடனடியாக செயல்படுத்தக்கோரி அனைத்து மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுக் களை விசாரிக்க மறுத்து தள் ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கு களை முடித்து வைத்து நேற்று (27.10.2020) உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் திருத்த மசோதாக் கள் நிறைவேற்றப்பட்டன. அதில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தடையின்றி எங்கு வேண்டுமானா லும் விற்பனை செய்வதற்கு வசதியாக இந்த மசோதா வழி வகுக்கும் என, மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து மேற்கண்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கி விட்டதால் தற்போது சட் டமாக நடைமுறைக்கு வந் துள்ளது. இந்நிலையில் இது விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரான சட்டம் எனக்கூறி தமிழகம் உட்பட நாடு முழு வதும் அரசியல் கட்சிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பிலும் தொடர் போராட் டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத் தின் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தரப்பில் ஆஜரான வழக் குரைஞர் தேவி போனியா உச்சநீதிமன்றத்தில் கடந்த 6ஆம் தேதி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,'நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை நாடு முழுவதும் உடனடியாக செயல்படுத்தக் கோரி அனைத்து மாநில அரசுகளுக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதேபோன்று பல்வேறு அமைப்புகள் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டி ருந்தது. இந்த நிலையில் மேற் கண்ட வழக்கானது உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபன்னா மற்றும் ராமசுப் ரமணியன் ஆகியோர் அமர் வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து உத்தரவில்,' மேற்கண்ட விவகாரம் அரசு சார்ந்த திட்டம் என்பதால் நீதிமன்றம் எந்தவித உத்தர வையும் பிறப்பிக்க முடியாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் புதிய பிரச்சனைகள் ஏற்படும் விதமாக வழிவகை அமைந்து விடும் என தெரிவித்த நீதிபதி கள், இதுதொடர்பாக பல் வேறு அமைப்புகள் தரப்பில் தாக்கல் செய்திருந்த அனைத்து மனுக்களையும் ஒட்டுமொத்த மாக தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட் டனர்.
No comments:
Post a Comment