500 மீனவர்கள் கொல்லப்பட்டும்  இலங்கை தூதரை அழைத்து எச்சரிக்காதது ஏன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 28, 2020

500 மீனவர்கள் கொல்லப்பட்டும்  இலங்கை தூதரை அழைத்து எச்சரிக்காதது ஏன்

500 மீனவர்கள் கொல்லப்பட்டும்  இலங்கை தூதரை அழைத்து எச்சரிக்காதது ஏன்?: வைகோ கேள்வி



சென்னை, அக். 28-  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளி யிட்டுள்ள அறிக்கை: மன்னார் வளை குடாவில் மீன்பிடிக்கச் சென்ற ராமேசு வரம் மீனவர்கள் மீது, இலங்கை கடற் படையின் படகுகளில் இருந்து கற் களை வீசித் தாக்கி இருக்கின்றனர்.


ஒரு மீனவர் மண்டை உடைந்தது. தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட வர்கள் கொல்லப்பட்ட பிறகும்கூட, இலங்கை தூதரை அழைத்து இந்தியா எச்சரிக்கை கூடச் செய்தது இல்லை என்பது வேதனைக்கு உரியது. இழப்பு ஈடு எதுவும் பெற்று தந்ததும் இல்லை.  இந்த பிரச்னைக்கு அடிப்படை காரணம், கச்சத்தீவை இலங் கையிடம் ஒப்படைத் ததுதான். அதை மீட்கக் கோரி, தமிழக மக்கள் எழுப்புகிற குரலை, இந்திய அரசு கண்டுகொள்வது இல்லை. தமிழக மீனவர்களை பாதுகாப்பதற்கு, கச்சத்தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.


புதிய பணி நியமனத்துக்கு தடை நீக்கம்


தமிழக அரசு உத்தரவு


சென்னை, அக். 28- கரோனா  ஊரடங்கு காரணமாக புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரசுப் பணிகளில் நியமிக்கப்படும் பணியாளர்கள் நியமனத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


கரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கால் மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது.


தற்போது தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மீண்டும் அரசு துறைகளில் புதிய பணியிடங்களை தோற்றுவிக்க தடையில்லை என்று தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் ஆரம்ப நிலை பணியாளர்களை தேர்ந்தெடுக்கலாம். கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு எந்தவித தடையும் இல்லை. அரசு துறைகளில் புதிய பணியாளர்களை நியமனம் செய்வதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


காவிரி நீர்மட்டம் நீர் உயர்வு


புதுடில்லி, அக். 28- காவிரியில் இருந்து தமிழக எல்லையான பிலிகுண்டுவில் 155.7 டி.எம்.சி தண்ணீர் வரத்து கணக்கிடப்பட்டுள் ளது என நேற்று (27.10.2020) நடந்த 37ஆவது ஒழுங்காற்று குழு கூட்டத்தின் போது தமிழக அரசு தரப்பில் புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.காவிரி ஒழுங்காற்று குழுவின் 37ஆவது கூட்டம் காணொலிமூலம், அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடந்தது. பிற்பகல் 1.30 மணியளவில் தொடங்கிய கூட்டம் மாலை 5மணி வரை நடைபெற்றது. இதில் நான்கு மாநில உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தின் சார்பாக காவிரி தொழில்நுட்பத் தலைவர் சுப்ரமணியன், துணைத்தலைவர் பட்டாபிராமன் மற்றும் உறுப்பினர்கள் ராமமூர்த்தி, திருவேட்டை செல்லம் ஆகியோர் திருச்சி அலுவலகத்தில் இருந்து பங்கேற்றனர்.


இதையடுத்து கூட்டத்தின் போது நீர் பங்கீடு, அணைப் பாதுகாப்பு, பராமரிப்பு உட்பட அனைத்து ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதில் குறிப்பாக காவிரியில் இருந்து தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 26ஆம் தேதிவரை மொத்தம் 155.7 டி.எம்.சி தண்ணீர் வந்தடைந் ததாக தமிழக பிரதிநிதிகள் தரப்பில் புள்ளி விவரம் தெரிவிக் கப்பட்டது. இதேபோன்று மற்ற மாநிலங்களும் தங்களுக்கான நீர் புள்ளி விவரங்களை ஒழுங்காற்று குழு முன்னிலையில் ஒப் படைத்துள்ளனர். இதையடுத்து கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆலோசனைகளும் நாளை நடக்கவுள்ள காவிரி ஆணைய கூட்டத்தின் போது அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும்.


இராணுவ தொழில்நுட்ப தகவல்கள் பரிமாற்றம் இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்


புதுடில்லி, அக். 28- எல்லையில் சீனா மிரட்டி வரும் பதற்றமான சூழ்நிலையில்,  இந்தியா-அமெரிக்கா இடையே இராணுவ தொழில் நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


இதன் மூலம், எதிரிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய உதவும் அமெரிக்காவின் இராணுவ செயற்கைக் கோள் புகைப்படங்கள், வரைபடங்கள் போன்றவை இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளது. இந்தியா-அமெரிக்கா நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் இடையேயான இரு தரப்புப் பேச்சு வார்த்தை கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இரு தரப்பு உறவை பலப்படுத்தும் இப்பேச்சுவார்த்தையின் 3ஆம் ஆண்டு சந்திப்பு டில்லியில் உள்ள அய்தராபாத் இல்லத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா தரப்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment