லக்னோ, அக் 26 உத்தரப் பிரதேசம் மற்றும் வட மாநிலங்களில் பாஜக சட்டமன்ற உறுப் பினர்கள், பாஜக தலைவர்கள் அமைச்சர்கள் எனப் பலரும் பாலியல் வன்கொடுமைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான நிஷாத் கட்சி என்ற கட்சியின் பதோனி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய்மிஸ்ரா என்பவர் உதவி கேட்டு வந்த 25 வயது பாடகியை,பாலியல் வன்கொடுமை செய்தார்.
குற்றம் சாட்டப்பட்ட விஜய் மிஸ்ரா நில ஆக்கிரமிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, ஆக்ரா சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். எனவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராக அளித் ததாக கூறியுள்ளார் அந்தப் பாடகி.
இதுபற்றி பாடோசி மாவட்டத்தின், கோபிகஞ்ச், காவல் நிலையத்தில் பாடகி கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: "அது 2014ஆம் ஆண்டு. மிஸ்ரா வீட்டில் ஒரு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அதில் பங்கேற்க என்னை அழைத்தார். நானும் கச்சேரி நடந்த அவர் வீட்டுக்குச் சென்றேன். பாடல் நிகழ்ச்சியும் நல்ல படியாகத்தான் முடிந்தது. அப்போது எனது வறுமை குறித்து அவரிடம் பணம் உதவி கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில் நான் வீட்டிற்கு புறப்பட இருந்த போது அவரது அடியாட்கள் என்னை வீட்டிற்குள் தூக்கிச்சென்று விஜய் மிஸ்ராவின் அறைக்குள் தள்ளிவிட்டனர். அங்கு விஜய் மிஸ்ரா என்னை பாலியல்வன்கொடுமை செய்துவிட்டார். அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டார். மேலும், நடந்ததை வெளியே சொன்னால் உன்னையும், உனது குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். எனக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது. பயத்தால் உறைந்துபோனேன்.
2015ஆம் ஆண்டு, என்னை மிரட்டி வாரணாசியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். பிறகு, அவரது மகனையும், உறவுக்காரரையும் என்னை வீட்டில் விட்டுவிடச் சொன் னார். ஆனால் அவர்களும் என்னை பாலியல்வன்கொடுமை பிறகு வீட்டில் சென்று விட்டனர்." இவ்வாறு தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து காவல்துறையினர் விஜய் மிஸ்ரா அவரது மகன் மற்றும் உறவுக்காரர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதே போல்உத்தரப்பிரதேச மாநிலம் பிஸ்ஸாலி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் குஷாகரா சாகர், இவர் மீது ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை தொடர்பான சில குற்றச்சாட்டுகளில் கொலை மற்றும் மிரட்டல் வழக்குகளும் உள்ளது, சுயேட்சையாக போட்டியிட்ட இவரை பாஜக தனது கட்சியில் சேர்த் துக்கொண்டு தாமரைச் சின்னத்தில் போட்டியிட வைத்தது.
இதில் அவர் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் சாமியார் முதல்வர் ஆதித்யநாத் 2019-ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யும் சட்டத்தின் கீழ் இவர் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன.
குஷாரா சாகர் தனது வீட்டில் வேலைசெய்து வந்த ஒருவரின் 15 வயதான மகளை சிறுமியென்றும் பாராமல் கடந்த சனிக்கிழமை (அக்.24)அன்றுபாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இது தொடர்பாக தனது தாயிடம் அந்தப் பெண் கூறியுள்ளார். இதனை அடுத்து அவ ரது தாயார் சட்டமன்ற உறுப்பினரிடம் சென்று இது பற்றி கேட்ட போது மிரட்டி அனுப்பி விட்டார். காவல் துறையில் புகார் அளித்த போது காவ லர்களும் அவரது புகாரை ஏற்கமறுத்து தாயார், அவரது மகள் மீது சட்டமன்ற உறுப்பினரிடம் பணம் கேட்டு மிரட் டுகிறார்கள் என்று வழக்குப் பதிவு செய்தனர்.
இதனை அடுத்து உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் மூலமாக மாவட்ட காவல் ஆணையரிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதில் "பாஜக சட்டமன்ற உறுப்பினர் குஷாரா சாகர் வீட்டில் தான் வேலைக்காரியாக பணிபுரிவதாகவும், தனது 15 வயது மகள் தனக்கு உதவியாக அவ்வப்போது வந்து வேலை செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து அதை படமெடுத்து வைத்து பலமுறை மிரட்டி தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்" என்று புகார் அளித்தார்
இதனை அறிந்துகொண்ட குஷா கரா சாகர் உறவினர்கள் புகாரை திரும்பப் பெற்றுக்கொள், உனக்கு 20 லட்சரூபாய் பணம் தருகிறோம் என்று கூறினார்கள்
இதனை மறுத்துவிடவே இவரது தந்தை அடியாட்களை விட்டு மிரட்டி யுள்ளார். இவரது தந்தை யோகேந்திர சாகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தான்.
உத்தரப் பிரதேசத்தில் மட்டும்
3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதில் குல்தீப் சிங் செங்கார் மட்டுமே சிறையில் உள்ளார். அதே போல் மத்திய இணை அமைச்சர் சாமியார் சாக்ஷி மீது விபத்தில் சிக்கியிருந்த காரில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கும், பல்வேறு கொலை வழக்குகளும் உள்ளன வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த சின்மயானந்தா என்பவர் தனது கல்லூரியில் படிக்கும் பல மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது, ஒரு மாணவி துணிச்சலுடன் விடியோ எடுத்து வெளியிட்டதும் சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, ஆனால் அந்த மாணவி பணம் கேட்டு பிளாக் மெயில் செய்தார் என்று கூறி அவரைச் சிறையில் அடைத்துள்ளனர். பாலியல் குற்றவாளி சின்மயானந்தா தற்போது பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் சாமியார் முதல்வர் ஆதித்தியநாத்திற்கு உதவியாக ஈடுபட்டு வருகிறார்.
No comments:
Post a Comment